புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10
புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10 புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம்பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் பத்தாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் மிதியடிபெற்றுமீள்படலம், தமிழகம் புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாளர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார். தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி அறிஞர் அண்ணாவின் படத்தைத்…
ஓமானில் பாரதி விழா
ஓமானில் பாரதி விழா கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்! என்ற பாரதியின் கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா? ஆம்! கடந்த புரட்டாசி 4, 2049 (20-9-2018) வியாழன் மாலை ‘பாரதி யார்?’ எனும் மேடை நாடகம், மசுகட்டு மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூசு பின் செய்யது அவர்களின் அருளோடும், வாழ்த்தோடும், அனைத்து மக்களின் ஆதரவோடும், மசுகட்டு நகரில் கோலாகலமாக அரங்கேறியது! எசு.பி.படைப்பாளர்(SB Creations) இயக்குநர் இராமன் குழுவினர் இசைக்கவி இரமணனுடன் னமும்,…
தமிழமல்லனின் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி
இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் ஒன்பதாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் தசரதன் சூழ்ச்சிப் படலம், கான்புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். செயலாளர்…
நலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு!
நலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான கண்ணியம் குலோத்துங்கன் ஐயா அவர்கள், நெஞ்சாங்குலை பாதிப்பால் இடருற்றார்; நேற்று (ஆவணி 19,2049-04.09.2018) இரவு குடும்பத்தினரும் தமிழன்பர்களும் தொழிலாளத் தோழர்களும் வருந்தும் வகையில் இவ்வுலக வாழ்வு நீத்தார். அவரது இறுதி வணக்க ஊர்வலம் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும். நிகழ்விடம்: 2068, கோபுரம் 2 ஆ, மதிப்பு எழில் தோற்றம் (Tower 2 B, Prestige Bella Vista) ஐயப்பன்தாங்கல், சென்னை 600056 (ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம் எதிரில்) தொடர்பிற்கு: மகன் குகன்…
மாணாக்கர் நலனுக்கான திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் கல்வி இரவு 2018
திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி இரவு 2018 திருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழக இசைவு பெற்றுப் பண வசதியின்மையால் படிப்பைத் தொடரமுடியாத நிலையில் மாணவர் பலர் உள்ளனர். இவர்கள் கல்வியைத் தொடர நிதி சேர்க்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி இரவு 2018 என்னும் பெயரிலான நிதிசேர் விருந்து ஆவணி 08, 2049 – 2018.08.24ஆம் நாள் மாலை 6.3௦மணி முதல் இரவு 9.௦௦ மணிவரை நடைபெற்றது. திருகோணமலை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள இலட்சுமி நாராயணன் கோவில் …
கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்
கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் தமிழ்நூல் வெளியீடு – விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் கடந்த ஆகட்டு 17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா சென்னை இ.கி.அ.(ஒய்எம்சிஏ) திடலில் நடைபெற்றது. புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று( ஆவணி 11, 2049 -27.08.2018 அன்று) , 2017-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களை எழுதிய படைப்பாளர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன. இவற்றுள் கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘எங்கிருந்து தொடங்குவது’…
புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-7
புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-7 புதுவைத் தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் ஏழாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் தசரதப்படலம், காப்புப் படலம், தாடகைக் கொலைப்படலம், மிதிலைப்படலம் ஆகிய படலங்களின் பொருள் பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி…
தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ – உரையரங்கம்
சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. தமிழ்வழிக் கல்விக்கழகம், தாய்த்தமிழ்க் கல்விப்பணி, தமிழ் அமைப்புகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க்கல்வி இயக்கம், உலகத்தமிழர் பேரவை முதலான பல அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பெற்ற, இக்கூட்டத்தில் திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி மழலையர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வழ.அங்கயற்கண்ணி பாரதிதாசன் பாடல் பாடினார். த.தமிழ்த்தென்றல் வரவேற்புரை யாற்றினார். இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை யுரையாற்றினார். முனைவர் க.ப. அறவாணன்…
‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை
‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை
புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4
புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4 புதுவை-தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் நான்காவது சொற்பொழிவில் இராவண காவியத்தின் காட்சிப்படலம், கைகோட்படலம், திருமணப்படலம் ஆகிய படலங்களின் பொருள் பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.பகுத்தறிவாளர் கழகச்செயலர் நெ.நடராசன் வரவேற்றுப்…
கவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு
கவிஞர் மு.முருகேசு எழுதிய கட்டுரை நூலுக்குச் சிறந்த வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ’இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ எனும் நூலுக்கு, கவிதை உறவு வழங்கும் ’மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு’ கிடைத்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளாகச் சென்னையிலிருந்து வெளிவரும் ‘கவிதை உறவு’ சார்பில், 15 ஆண்டுகளாகத் தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கின்றனர். 2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா…
கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருநாடகாவில் கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்! 15 நாள் கால வாய்ப்பில் ச.ம.உ.களை வாங்கி ஆட்சியைச் சிக்கலின்றி அமைக்கலாம் எனப் பாசக திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 24 மணி நேர வாய்ப்பே அளித்தமையால் பேர வணிகத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. இச்சூழலை எதிர்பார்த்தே எடியூரப்பா விலக வேண்டும் என நேற்று குறிப்பிட்டிருந்தோம்,( எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும். ) மோசமான தோல்வியை வெளிப்படுத்துவதை விட விலகுவதே மேல் எனக் குறுக்கு வழியில் கருநாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்ற…
