இளைஞர் கைகளில் இணையத்தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்
இளைஞர் கைகளில் இணையத்தமிழ் தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அனைவரும் எதிரொலிக்கும் கவலை முதியோர் அவையாக இருக்கிறதே என்பதுதான். எந்தத் தமிழ்க்கூட்டம் என்றாலும், இளைஞர்களைக் காண முடிவதில்லை. ஒருவேளை உரையாளர்களின் குடும்பத்தினர் யாரும் வந்திருந்தாலும் அவர்கள் ஒருவர் அல்லது இருவராகத்தான் இருப்பர். கூட்டம் இறுதிவரை இருப்பார்கள் என்பதும் ஐயமே. இதற்காகவே நான் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினேன். அங்கும் தமிழ் பயிலும் ஏதோ ஓர் ஆண்டின் மாணாக்கர்கள் மட்டும் அமர்ந்திருப்பார்கள். வருபவர்கள் ஆர்வமாகத்தான் இருப்பர். ஆனால், கல்லூரியில் இந்த நிகழ்ச்சிக்கு இத்தனாம் ஆண்டு…
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை : 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள்
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை : 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள் தமிழகத்திலும் பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் பதிவு செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ‘அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை’ பேரவையின் செயற்குழுக் கூட்டமும் பொதுக்குழுக் கூட்டமும் சென்னை வண்டலூரில் உள்ள தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தில் 10/09/2017 அன்று காலை முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். . தலைவர்:திரு.மீனாட்சி சுந்தரம்(முத்து.செல்வன்) (பெங்களூர்த் தமிழ்ச்…
கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்!
கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்! வந்தவாசி. செப்.05. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலாவுக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பாகக் கல்விப்பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு அறிஞர் இராதாகிருட்டிணன் விருதினை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்தாண்டு செய்யாறு கல்வி மாவட்டத்தில் சிறப்பாகக் கல்விப்பணி ஆற்றிய ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருது, வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவரும் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. …
குறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன – கவி மு.முருகேசு
குறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன – கவி மு.முருகேசு நூற்றாண்டு கண்ட குறும்பாக்கள்(ஐ.கூ கவிதைகள்) புதிய பார்வையைத் தமிழிலக்கியத்திற்குத் தந்துள்ளன – நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேசு வாலாசாபேட்டை.செப்.10. வாலாசாபேட்டை அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற குறும்பாக்கள் நூல் வெளியீட்டு விழாவில், தமிழில் அறிமுகமாகி நூற்றாண்டைத் தொட்டிருக்கும் சப்பானிய ஐக்கூ கவிதைகள், இன்றைக்குத் தமிழிலக்கியத்திற்குப் புதிய பார்வையையும் செறிவையும் தந்துள்ளன என்று வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர்…
தமிழகத்திற்காகப் பாடுபட்டவர்களை மறந்து விடக்கூடாது – கவிஞர் மு.முருகேசு
தமிழக வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது வந்தவாசி. ஆக.26. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், சிரீகிருட்டிணா பயிற்சி மையம் இணைந்து நடத்திய நூலகர் நாள் விழா, முன்னாள் தமிழக முதல்வர் எம்ஞ்சியாரின் நூற்றாண்டு விழா, போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முனேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது என்று நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் மு.முருகேசு கூறினார். இவ்விழாவில்…
அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? – இலக்குவனார் திருவள்ளுவன்
அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது! நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது! மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது! மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும் உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா? அதற்காகத் தளராமல்படித்தது தவறா? …
மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் ஆற்ற முடியும் – கவிஞர் மு.முருகேசு
வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல், மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் ஆற்ற முடியும் – கவிஞர் மு.முருகேசு- வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்கில், வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல் மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் அவர்களால் ஆற்ற – சாதிக்க- முடியும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார். வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்க நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர்…
உயிர்ச்சமாதி அடைய 3 ஆவது நாளாகச் சிறையில் முருகன் உணவு மறுப்பு!
உயிர்ச்சமாதி அடைய 3 ஆவது நாளாக சிறையில் முருகன் உணவு மறுப்பு! இராசீவு காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முறையின்றித் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முருகன். இவரைச் சந்திக்க உறவினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய பேச்சுக்குப் பிறகும் சிறை விதிகளை மீறி முருகன் உணவுமறுப்பு மேற்கொள்வதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்கின்றனர். ஏற்கெனவே தடைவிதித்துள்ளதால் போராடுபவரை அதற்காகத்தான் சந்திப்பு மறுக்கப்படுவதாகப் பரிவின்றிக் கூறுகின்றனரே! உயிர்ச்சமாதி அடைவதற்காக கடந்த 18.08. இல் தனது உண்ணா நோன்பை முருகன் தொடங்கினார். சிறையில் 3-…
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா : இணையவழி உரையாடல் காணுரைகள்
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா இணையவழி உரையாடல் காணுரைகள் மலேசியாவின் இரண்டாம் பெரிய நகராமான பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உலகத்தமிழிணையமாநாடு ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இது குறித்துச் சென்னையில் ஆடி 21, 2048 ஞாயிறு ஆக.06, 2017 அன்று மாலை நடைபெற்ற இணைய வழிஉரையாடல் பதிவுகள். உரையாளர் மரு.மணவை மு.செம்மல் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/ https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/ நெறியாளர் இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488290941236990/ https://www.facebook.com/DrSemmal/videos/1488290941236990/…
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரான, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கி.பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆடி 10, 2048 / 26.07.2017 அன்று தலைமைச் செயலகத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஐந்தாம் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திட்டங்கள், செயற்பாடுகள், பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அண்மையில் ஊடகங்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருவாரூர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில்…
செய்திகளில் மலேசியா இணையத் தமிழ் மாநாடு
செய்திகளில் மலேசியா இணையத் தமிழ் மாநாடு மாலைமுரசு விகடன் மலேசியாவில் தமிழ் இணைய மாநாடு! இரா.தமிழ்க்கனல் மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், வரும் ஆகத்து 26 முதல் 28-ஆம் நாள் வரை, ’உலகத் தமிழ் இணைய மாநாடு 2017’ நடத்தப்படுகிறது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, மாநாட்டின் இணைத்தலைவர் முனைவர் இலட்சுமி கார்மேகம், நெறியாளர் திருவள்ளுவன் இலக்குவனார் ஆகியோர் இதைத் தெரிவித்தனர். மலேசியாவில், பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியல்…
துபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா
துபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாயில் பணிபுரிந்து வரும் திருமதி. சோபியாவின் கவிதை நூல் தொகுப்பு ‘ கனலி’ ஆனி 15, 2048 / 29.06.2017 வியாழக்கிழமை மாலை துபாய் வசந்த பவன் உணவகத்தில் வெளியிடப்பட்டது. ஓசூரைச் சேர்ந்த இவர் சார்சாவில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். துபாய் அல்நாதா வசந்தபவனில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காப்பியக்கோ.திரு சின்னா சர்ப்புதீன் கலந்து கொண்டார். அபுதாபியைச் சேர்ந்த எழுத்தாளர் (இ)யூசுப்பு தலைமையேற்றார். திருமதி. செசிலாபானு, ஆசிப் மீரான் ,…
