கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா

கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா   கவிதைஉறவு 45 ஆம் ஆண்டு விழாவும்  ஏர்வாடியாரின் நூல்களின் வெளியீடும் கவிதை உறவுப் பரிசுகள், விருதுகள் வழங்குதலும் சென்னை வாணி மகாலில் மிகச்சிறப்பாக நடந்தது.  முனைவர் நல்லி குப்புசாமி(செட்டி) தலைமையில் இல கணேசன் பரிசுகள் விருதுகள் வழங்கினார். கவிப்பேரருவி தமிழன்பன் சிறப்புரையாற்றினார்.  ஏர்வாடியார் முதல் நூல் 1976 இல் கவியரசர் கண்ணதாசன் வெளியிட்டார். இவ்விழாவில் 100ஆவது நூலைத் தமிழன்பன் வெளியிட  பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.   முனைவர் உலகநாயகி, பேராசிரியர்  இரா.மோகன், கவிஞர்…

விட்டர் இராசலிங்கம் புத்தக வெளியீட்டுப் படங்கள்

புத்தக வெளியீட்டு விழா புத்தகத்தின் பெயர் :  ‘ History of the dispossessed Sri lankan Tamils’”  ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா  அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) [பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக.]  

தி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் ‌வெளியீடு

சித்திரை 11, 2048 / 24-4-2017 அன்று சென்னை  மயிலாப்பூர்  பாரதிய  வித்தியா பவன்  அரங்கில்,  புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய  ஆய்வுகள்’ என்ற நூல‌ை மாண்புமிகு  நீதியரசர்  வள்ளிநாயகம் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.   முனைவர்  பெ. அருத்தநாரீசுவரன், முனைவர்  சரசுவதி இராமநாதன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர். கிருட்டிணன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர்  கலந்துகொண்டு வாழ்ந்துரை நல்கினர்.  முனைவர் கோ பெரியண்ணன்  தலைமையுரை ஆற்றினார்.  முனைவர் உலகநாயகி பழனி நிரலுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.

மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே! – உலகப் புத்தக நாள் விழாவில் பேச்சு –

மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே!       வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலகப்புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்குப் படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்கள” என்று முன்னாள் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் எசு.குமார் பேசினார்.        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார்.         வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் 100 பள்ளி…

சிங்கப்பூரில் ‘மானுடம் போற்றும் மாணவர்கள்’ நிகழ்ச்சி

சிங்கப்பூரில் சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய ‘மானுடம் போற்றும் மாணவர்கள்’ நிகழ்ச்சி   வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் சிங்கப்பூரில் நடைபெற்று வரும் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, திருச்சி சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), ஞாயிற்றுக்கிழமை  சித்திரை 03, 2048 / 16-04-2017  அன்று, சிங்கப்பூரிலுள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில், “மானுடம் போற்றும் மாணவர்கள்” என்ற இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது.   சிங்கப்பூரில் தமிழ் மொழியை அடுத்த…

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகச் சித்தர்கள் மாநாடு

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகச் சித்தர்கள் மாநாடு சித்திரை 01, 2048 / 14-04-2017அன்று  நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் விழாவ மலரை வெளியிட்டு உரையாற்றினார். மரு.பாசுகரன் தலைமை வகித்தார். தமிழ்ப் பண்பாட்டுச் சங்கப் பொதுச் செயலாளர் சித்தமருத்துவர் பாக்கம் தமிழன் (பிரதாபசிம்மன்) வரவேற்புரையாற்றினார்.  பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடப் பொறுப்பாளர் முனைவர் ஆ. மணவழகன் முன்னிலை வகித்தார்.  பி.ஏ. சத்தியநாராயணன் தொடக்கவுரையாற்றினார் வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். முன்னாள் துணைவேந்தர் டி.சி. நாராயணன், பேரா.இராமசாமி, மரு. இராமலிங்கம், மரு….

இயித்தாவில் (Jeddah) இசுலாமியச் சிறப்புத் தமிழ்மாநாடு

  சவூதி அரேபியா  இயித்தாவில் (Jeddah)  சித்திரை 01, 2048 / ஏப்பிரல் 14  வெள்ளிக்கிழமை அன்று  இயித்தா இசுலாமிய அழைப்பகம் தமிழ்ப் பிரிவு சார்பில் சிறப்பு மாநாடு  சிறப்பாக நடைபெற்றது.   நிகழ்ச்சியில்  கல்வியாளர்(மவுலவி) இப்ராகிம் மதனி, கல்வியாளர் அன்சார் உசைன் பிருதவ்வி, இசுமாயில்  சியாகி , கல்வியாளர் முசாகி  இபன்  இரசீன், கல்வியாளர் அப்துல் பாசித்துபுகாரி,  உண்மை உதயம் ஆசிரியர் மவ்லவி இசுமாயில் சலபி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாகக் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன….

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கமும் அ.இ.த.பே.செயற்குழுக்கூட்டமும் – ஒளிப்படங்கள்

கடந்த திங்கள் திருவனந்தபுரத்தில் அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப்பேரவையின் செயற்குழுக் கூட்டம் திருமுத்துச்செல்வன் தலைமையில் புலவர் த.சுந்தரராசன், திரு முத்துராமன் முன்னிலையில் நடைபெற்றது.  தமிழ்நாட்டில் காப்பிக்காட்டு ஊரில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் சிலைப்பகுதியல் சிலையரங்கம் அல்லது கோபுரம் எழுப்புவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. [ படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6403986012928051889″]

அடுத்தது என்ன? – கலந்துரையாடல் நிகழ்வின் படங்கள்

மாசி 13, 2048 / 25.02.2017 சனிக்கிழமை, நேரம்: காலை 10.00 மணி அளவில் சென்னையில், “ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?” என்னும் தலைப்பிலான   34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல்  நிகழ்வின் ஒளிப்படங்கள் [ படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6403985282724518705″]

பொன்விழாவில் வந்தவாசிக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா

50-ஆவது சிறப்பு பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில் அரசுக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா:  சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் வழங்கினார்      வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 50-ஆவது சிறப்புப் பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில், கிளை நூலகத்திற்கு  வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார்.      இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார்.     விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தெள்ளாறு ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கே.ஆர்.சீதாபதி, நூலகத்தில்…

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன   தமிழ்ப்பயிற்றுமொழியை வலியுறுத்தும் கட்சியினரும் அமைப்பினரும் தலைவர்களும் ஆர்வலர்களும் தங்கள் குடும்பத்தினரைத் தமிழ்வழிக் கல்விக்கூடங்களிலேயே சேர்க்க வேண்டும். தரமான தமிழ்வழிப்பள்ளிக்கூடம் இன்மையால் தமிழ்வழிக்கல்வி அளிக்க இயலவில்லை என்னும் குறைபாட்டைப் போக்கவேண்டும். எனவே, ஊராட்சி தோறும் தமிழ்வழிக்கல்விக்கூடங்களைத்தொடங்க வேண்டும். அரசு மூடிவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தமிழ்வழிக்கல்விக்கூடங்களை எடுத்துச் சிறப்பாக நடத்த வேண்டும். தமிழ்வழிப்பள்ளிகளைத் தத்து எடுத்துத் தரம் உயர்ந்தனவாக மாற்ற வேண்டும். தாங்கள் நடத்தும் ஆங்கிலக் கல்வி நிலையங்களைத் தமிழ்வழிக்கல்விக்கூடங்களாக மாற்ற வேண்டும். தமிழ்வழிக்கல்விக்கு எதிரானவர்களைப் பொறுப்புகளிலிருந்து நீக்க…

கடலூரில் தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா

  தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா, கடலுார் கடலூர் மாவட்டத்தமிழ்ச்சங்கம் சார்பில் திருப்புமுனைப் பயிற்சி நடுவத்தில்  நடைபெற்றது. பேரா.இராச.குழந்தை வேலனார் தலைமை தாங்கினார்.  ‘தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள்‘ என்னும் தலைப்பில் முனைவர் க.தமிழமல்லன் சிறப்புரை நிகழ்த்தினார். புலவர் சிவ.இளங்கோவன், கதிர்.முத்தையன் ஆகியோர் பாவேந்தர், பாவாணர் அளித்த தனித்தமிழ் இயக்கப் பங்களிப்புக்குறித்துப் பேசினர். முன்னதாகப் படத்திறப்பும் பாவரங்கும்  நடைபெற்றன.