ஐ.நாவே நாங்கள் நாதி அற்ற இனமா? வவுனியாவில் கவனவீர்ப்புப் போராட்டம் – விழலுக்கிறைத்த நீராயிற்றே !
ஐ.நாவே நாங்கள் நாதி அற்ற இனமா? எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா? வவுனியாவில் கவனவீர்ப்புப் போராட்டம் விழலுக்கிறைத்த நீராயிற்றே! தற்போது ஒரு ‘மறுசுழல் தீர்மானத்தின்’ வாயிலாக, சிறீலங்காவுக்கு மேலும் ஈராண்டுக்கால நீட்டிப்புத்தர முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக்கூறாகிய, உசாவல்களில் அயல்நாட்டு நீதிபதிகளைச் சேர்த்துக்கொள்வது என்பதை ஏற்கெனவே சிறீலங்காவின் அதிபரும் -தலைமையரும்( பிரதமரும்) பகிரங்கமாக மறுத்துள்ளார்கள். அரசாங்கமே ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக்கூறினை நிராகரிக்கிறது என்றால், அதே அரசாங்கம் இந்த ‘மறுசுழல் தீர்மானத்தைச் செயலாக்கும்’ என்று ஐநா மனித உரிமை மன்றம்…
சவூதி இரியாத்தில் நடைபெற்ற குடும்ப ஒன்று கூடல்
சவூதி இரியாத்தில் நடைபெற்ற குடும்ப ஒன்று கூடல் சவூதி இரியாத்து நகரில் பரங்கிப்பேட்டை இசுலாமிய நல்வாழ்வுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பரங்கிப்பேட்டை குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்வு 17 மார்ச்சு 2017 அன்று இசுதிராஃகா இலயாலைனா என்னும் மகிழகத்தில் மிகச் சிறப்பாக நிகழ்வுற்றது. இதில் அகவை வாரியாக பிள்ளைகளுக்கான ஒப்பித்தல்(கிராஅத்து) போட்டிகள், பேச்சுப் போட்டி, இசுலாமிய வினாவிடை எழுத்துத் தேர்வு, ஆண்கள் பெண்களுக்கான இசுலாமிய எழுத்துத் தேர்வு ஆகிய அறிவுசார் போட்டிகளும், ஆண்களுக்கான கால்பந்து, மட்டைப்பந்தாட்டங்களும், மாற்றி எண்ணு(யோசி), ஊமை விளையாட்டு (Dumb Charades)…
ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ தன் வரலாற்று நூல் – சென்னையில் வெளியீடு!
ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்‘ தன் வரலாற்று நூல் – சென்னையில் வெளியீடு! தமிழீழ ஆதரவு – தமிழர் உரிமை ஆதரவு – மதவெறி எதிர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் தமது ஓவியங்களின் மூலம் அழுத்தமான தடம் பதித்துள்ள ஓவியர் கு. புகழேந்தி எழுதியுள்ள ‘நானும் எனது நிறமும்’ – தன்வரலாற்று நூல், மாசி 28, 2048 / 12.03.2017 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. சென்னை எம்ஞ்சியார். நகர் மகா அரங்கில், நடைபெற்ற இவ்விழாவுக்குத் தமிழீழ உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் திரு. தஞ்சை இராமமூர்த்தி, தோழமை…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்! இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களை உசாவுவதற்கு, ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு விடையளிக்கும் கடப்பாட்டினை தொடர்ந்து புறக்கணித்துவரும் இலங்கை அரசுக்கு, இம்முறையும் செனிவாவில் இன்னும் இரண்டு வருட கால நீட்டிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் மாசி 28, 2048 / 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டு காணாமல்…
சிலப்பதிகாரப் பெருவிழா 2017
(படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.) “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணீயாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் போற்றிய சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார். சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் “இளங்கோ விருது”வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும். 2014-இல் சென்னையிலும் 2015-இல் நாமக்கல்லிலும் சிலப்பதிகார மாநாடுகள் நடைபெற்றன. 2016 & 2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருதுகளும் இளைய சிலம்பொலி விருதுகளும்…
நோர்வே : கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல்
நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) நண்பகல் 13:00மணிக்கு (Slora Idrettspark, Strømmen, Norway என்னும் இடத்தில்) நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள், வளர்ந்தோர் என 350பேர் கலந்துகொண்டனர். ஈழத் தமிழர்களாகிய நாம் கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் அறம்சார் உரிமைப்போராட்டத்தை ஆதரித்து, அவர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்புகளை வழங்குவது குமுக(சமூக)அமைப்பான எமது கடமை என்று கருதி நோர்வே தமிழ்ச்சங்கம் இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது. நோர்வே தமிழச்சங்கம்…
எழுத்தாளர்களைக் குமுகம்(சமூகம்) ஏற்க வேண்டும்!
எழுத்தாளர்களைக் குமுகம்(சமூகம்) ஏற்க வேண்டும்! இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக எசு.செல்வசுந்தரியின் ‘கை நழுவும் சொருக்கம்‘ (சிறுகதை நூல்) ‘உன்னை விட்டு விலகுவதில்லை‘ (புதினம்) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் முனைவர் கே.எசு.பழனிச்சாமி தலைமையில் எழுத்தாளர் மதுரா முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்பகராசு, வரலொட்டி ரெங்காசாமி, குமாரசாமி, பாசுகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் இராச்சா, திருநங்கை பிரியாபாபு ஆகியோர் நூல் ஆய்வு செய்தனர் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பிரபஞ்சன்…
சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்: தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம்
சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்: தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம் விமானப்படைத் தளத்திற்கு முன்பாக உள்ள வீதியில், கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த 9 ஆம் நாள் முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குளிரையும் வெயிலையும் பொருட்படுத்தாது தமது பூர்வீக நிலத்தினை மீட்கும் போராட்டத்தில் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் 2 ஆவது வாரமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். .அம்மக்கள், சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.r. மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப் பல்வேறு தரப்பினரும்…
முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்
முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல் இன்று கனடா நாட்டில் வசிக்கும் செயசுந்தர் கலைவாணி இணையரின் 10 ஆவது திருமண ஆண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 27 சிறார்களுக்கு 30000 உரூபா பெறுமதியான புத்தாடைகளை வழங்கி வைத்துள்ளார். பாரதி பெண்கள் சிறுவர் இல்ல நிருவாகத்தினரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் புத்தாடைகள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்ததாவது தமது இல்லத்தில் 108 பெண் சிறார்கள் உள்ளதாகவும் இவர்கள் யாவரும் போர் வடுக்களை…
பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர் வழங்கினார்.
பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர் வழங்கினார். தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விழா சென்னையில், தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் தமிழக முதல்வர், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதுபோழ்து, தமிழ்த்தென்றல் திருவிக விருதினைப் பேரா.மறைமலை இலக்குவனார்க்கு முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். [படங்களை அழுத்தின் பெரிய அளவில் காணலாம்.]
திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் நூல் வெளியீடு – ஒளிப்படங்கள்
திருக்குறள் தேனீ வெ.அரங்கராசனின் ‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’ நூல் வெளியிட்டவர் : இலக்குவனார் திருவள்ளுவன் தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017 உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம். [embpicasa id=”6375838769978542913″] படங்கள் : பொறி.தி.ஈழக்கதிர்
திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா : சில படங்கள்
தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017 சென்னை திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா : சில படங்கள் முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்கினார். விருதுகளும் விருதாளர்களும் திருவள்ளுவர் விருது – புலவர் வீரமணி பெரியார் விருது – பண்ருட்டி இராமச்சந்திரன் அம்பேத்கர் விருது – மருத்துவர் துரைசாமி அண்ணா விருது – கவிஞர் கூரம் துரை காமராசர் விருது – நீலகண்டன் பாரதியார் விருது – பேராசிரியர் கணபதிராமன் பாரதிதாசன் விருது – கவிஞர் பாரதி திரு.வி.க….
