மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவியப் போட்டி
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] தேவகோட்டை – பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை மாணவர் புகழேந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அப்துல் கலாம் நினைவு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, மாணவ மாணவியர் முத்தையன், செயசிரீ, பாலமுருகன், கிசோர்குமார், அசய் பிரகாசு, காயத்திரி, அரிகரன், பரமேசுவரி ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒன்றாம் வகுப்பு…
அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப் பூரத் திருவிழா
ஆடிப் பூரத் திருவிழா ஆடிப் பூரத்திருவிழா புசசல்லாவை வாடித்துரை தோட்டம் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. அம்மனின் திருவுருவம் உள்வீதி வலம் வந்தது. இவ் விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் இலங்கைத் தொழிலாளர் பேராய(காங்கிரசு) துணைத்தலைவரும் முன்னாள் பகுதிஅவை சபை உறுப்பினருமான எம்.எசு.எசு.செல்லமுத்து கலந்து சிறப்பித்தார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மிதிவண்டிகள் அன்பளிப்பு
வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தினால் மிதிவண்டிகள் அன்பளிப்பு புலம்பெயர் உறவான பிரான்சைச் சேர்ந்த உதயகுமார் தருசினி தன் தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்குப் புதிய மிதிவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின் பரிந்துரையின் கீழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக இன்று சங்கத் தலைமைச்செயலகத்தில் வைத்து நவாலி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த சி.நிரஞ்சிகா, வட்டு இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வி.பவானி…
கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். -கவிஞர் தங்கம் மூர்த்தி
கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். -கவிஞர் தங்கம் மூர்த்தி இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளச்சிக்கேற்ப கற்றலில் புதுமைகளைப் புகுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்று கவிஞர் தங்கம் மூர்த்தி பேசினார். புதுக்கோட்டையில் ஆடி 15, 2047 / சூலை 30 அன்று இந்தி்யாவிற்கு உதவு(எய்டு-இந்தியா)- சிரீ வெங்கடேசுவரா பதின்நிலை-மேல்நிலைப்பள்ளி நடத்தும் தொடக்கப்பள்ளிக் குழந்தைகளின் கற்றல் திறன் வளர்ப்பிற்காக ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்…
கவிக்கொண்டல் விழா – ஒளிப்படங்கள்
செய்திக்கு : கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம். [embpicasa id=”6313078109669028289″]
மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித்தேர்த்திருவிழா
மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித் தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய சிற்றூர்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மன்பதை மேம்பாட்டு(சமுதாய அபிவிருத்தி) அமைச்சர் பழனி திகாம்பரம் மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரட்ன முதலானவர்கள் கலந்துகொண்டனர்.
மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம்
மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம். நுவரெலியா சுழற் கழகம் இந்தியாவின் கோயம்புத்தூர் சுழற்கழகத்துடன் இணைந்து இயற்கைப் பேரழிவால் அல்லது நேர்ச்சிகளால்(விபத்துக்களால்) ஒரு பகுதி கைதுண்டிக்கப்பட்டவர்களுக்குச் செயற்கைக் கைகளை வழங்கியது. இதன்போது ஆறு செயற்கைக் கைகளைக் கோயம்புத்தூர் சுழற்கழகத்தின் செயலாளர் செயகாந்தன், நுவரெலியா சுழற்கழகத் தலைவர் உசித பண்டாரவிடம் கையளித்தார். பயனாளிகளுக்குக் கைகள் வழங்கப்படுவதையும் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் வின்சண்டு அசோகனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாணிக்கவாசகர் நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்
மாணிக்கவாசகர் நடுநிலைப்பள்ளியில் காமராசர் நினைவு கல்வி வளர்ச்சி நாள் விழா: நகர்மன்ற தலைவர் பங்கேற்பு தேவகோட்டை : தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காமராசர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியை வாசுகி வரவேற்றார். விழாவின் தொடக்கமாக அபிராமி அந்தாதி, திருக்குறள் நடனம் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் மன்றத் தலைவர் சுமித்ரா இரவிக்குமார் விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசுகையில், காமராசர் எத்தனையோ தலைமுறை…
களுப்பான தோட்டப் பாடசாலைக்கு அமைச்சர் இராதாகிருட்டிணன் வருகை
களுப்பான தோட்டப் பாடசாலைக்கு அமைச்சர் இராதாகிருட்டிணன் வருகை கேகாலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கும் பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல் துணைக்கருவிகளை கையளிப்பதற்கும் மாநிலக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பள்ளிக்கு வருகை புரிந்தார். யாழ்ப்பானம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் இலண்டன் வாழ் பழைய மாணவர்களின் “ஏணி” தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர் க.குமணன,; எம்.மரியதாசு, கோலை மாவட்ட ம.ம.மு அமைப்பாளர் செகநாதான் மாகாண அவை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள்,…
காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலை திறப்பு விழா – நிகழ்ச்சிப் படங்கள்
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6306482064070265953″] படங்கள் நன்றி : தினமணி இலாசர், பெங்களூர் மு.மீனாட்சி சுந்தரம், கருங்கல் கண்ணன், அகரம்
பசும்பொன் நுண்கலைக்கழகப் படத்திறப்பு நிகழ்வுப் படங்கள்
திருமிகு எசு.ஆர்.கருப்பண்ணன் இ.ஆ.ப.(ஓய்வு) தாமரைத்திரு மனோரமா பொறியாளர் பொன்னையா ஆகியோர் படத்திறப்பு ஆனி 19, 2047 / 03-07-2016 காலை 10.00 [embpicasa id=”6305203207396406129″]
புதுச்சேரி ஆளுநர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்
புதுச்சேரி ஆளுநர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம் ஆண்டுதோறும் சிலப்பதிகாரவிழாவைப் புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் நடத்திவருகிறது. இவ்வாண்டு ஆனி 16, 2047 / சூன் 30, 2016 இல் புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகார விழா நடைபெற்றது. தனித்தமிழ்இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் முனைவர் கனகராசு வரவேற்புரை நிகழ்த்தினார். சிலப்பதிகாரம் பற்றிய பா வரங்கில் மு.பாலசுப்பிரமணியன், இரா.தேவதாசு, ஆறு.செல்வன், சண்முகசுந்தரம், இரா. இள முருகன், நட.இராமமூர்த்தி ஆகிய பாவலர்கள் கலந்து கொண்டனர். புரவலர் கி.கலியபெருமாள் செயல்அறிக்கை படித்தார்….
