இரம்சான் நோன்பை முன்னிட்டு விளையாட்டுப்போட்டி – வைகை அனிசு

 தேவதானப்பட்டியில் முசுலிம்சமாஅத்து இளைஞர்கள் விளையாட்டுக்குழுவும் இந்திய நன்மதிப்பு முன்னணியும்(பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா) ஆண்டுதோறும் இரம்சான் பெருநாளை முன்னிட்டு விளையாட்டுப்போட்டி நடத்தி வருகின்றன.  தேவதானப்பட்டியில் உள்ள திப்பு சுல்தான் திடலில் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் கம்பு விளையாட்டு, சடுகுடு போட்டி, இசைநாற்காலி, ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி முதலான பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.   இந்நிகழ்ச்சிக்குப் பள்ளிவாசல் சமாஅத்துத் தலைவர் அப்துல் கபார்கான் தலைமை தாங்கிப் பரிசுகளை வழங்கினார். இவ்விளையாட்டுப்போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ,…

தேவதானப்பட்டியில் இலவசப் பொருள்கள் வழங்கல்

  தேவதானப்பட்டியில் இந்தியத் தவ்கித் சமாத்து சார்பில் பொதுமக்களுக்கு இலவசப் பொருள்கள் வழங்கப் பெற்றன.

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் : காமராசர் விழா : படங்கள்

ஆனி 20, 2046 / சூலை 05, 2015 கவியரங்கம் :கவிஞர் ஆலந்தூர் செல்வராசு கருத்தரங்கம் : முனைவர் குமரிச்செழியன் பெரிதாய்க் காணப் படத்தின்மேல் சொடுக்குக!  

எழுத்தாளர் மு.முருகேசுக்குப் பாராட்டும் பரிசும்

வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன!        வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன.   நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. 18-ஆவது ஆண்டு புத்தகக்காட்சி நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆனி 19, 2046/ சூலை 04, 2015 அன்று தொடங்கியது. வரும் ஆனி 27 /சூலை 12-ஆம் நாள்வரை பத்து நாள்கள் நடைபெறவுள்ள…

கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை!

கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை! அனைவருக்கும் இனிய வணக்கங்கள். சப்பான் தமிழ்ச்சங்கத்தின் மொழிவளர்ச்சித் துறையின் சார்பாகச் சப்பான் நாட்டின் கவாசாகி நகரில் இயங்கிவரும் கோஅனா பள்ளிக்குச் (Kohana international school) சென்றிருந்தோம். இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பள்ளியின் முதல்வருமான திருமதி.பிரியா அவர்கள் நம்மை அன்புடன் வரவேற்றார். கோஅனா பள்ளி பன்னாட்டுப் பொதுச் சான்றிதழ்க் கல்விக்கான  (IGCS என்னும்) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளியாகும். இந்தப்பள்ளியில் நம்முடைய தமிழ்ப்பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து ஒன்றாகக் கல்வி கற்கிறார்கள் மேலும் கவாசாகி நகரிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நம்முடைய தமிழ்ச்சொந்தங்கள்…

தொல்காப்பியர் சிலை – பார்வையும் பதிவும்

தொல்காப்பியர் சிலையில் மாற்றவேண்டுவன   குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை உருவாக்கப் பணி, படிமப் பார்வைக் குழுவினரால் (ஆனி13, 2046 / சூன் 28, 2015 அன்று) பார்வையிடப்பட்டது.   சிற்பி இரவி, தனக்கு அளிக்கப்பட்ட முன்முறை படத்தினைப்போல் மிகச் சிறப்பாகச் சிலையை வடிவமைத்துள்ளார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட படத்தில் தவறுகள் இருந்தமையால், சில குறைபாடுகள் சிலையில் உள்ளன. சிலையைப் பார்வையிட்ட பெங்களுர் முத்துச்செல்வன், ஆறு.அழகப்பன், த.சுந்தரராசன், கவிக்கோ ஞானச்செல்வன், இலக்குவனார் திருவள்ளுவன், சிரீதரன், நாஞ்சில் நடராசன், கணபதி, அனகை நா.சிவன்…

சமூக ஞானத்தைப் பெறுவதற்குப் புத்தக வாசிப்பே பெரிதும் துணை!

       மனிதன் மன்பதை அறிவைப் பெறுவதற்கு            புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன        – வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் பேச்சு –            வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் அறிமுக விழாவில், ஒரு மனிதன் சமூக அக்கறையையும், மன்பதை அறிவைபயும் பெறுவதற்குப் புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு   பேசினார்.           கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர்…

மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா – நிகழ்ச்சிப்படங்கள்

ஆனி 02, 2046 /21.06.201 ஞாயிறன்று சென்னை உமாபதி அரங்கத்தில் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா மெய்யப்பனார் அறக்கட்டளை விருது வழங்குவிழா நூல்கள் வெளியீடு ஆகியன நடைபெற்றன. (பெரிய அளவில் பார்க்கப் படங்கள் மேல் சொடுக்கவும்) நிகழ்ச்சி விவரம்