அ.வாடிப்பட்டி ஊரட்சியில் விடுதலை நாளை முன்னிட்டு மடி கணிணி வழங்கும் விழா

அ.வாடிப்பட்டி ஊரட்சியில்  விடுதலை நாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு மடி கணிணி வழங்கும் விழா தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி ஊராட்சியில் விடுதலை நாளை முன்னிட்டு மடி கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமால பிச்சைமணி தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர் பிச்சை மணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சிஒன்றியக்குழுத்தலைவர் செல்லமுத்து கலந்து கொண்டார். அதன்பின்னர் மாணவ, மாணவியர்களுக்கு மடி கணிணி, புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி   மாணாக்கர் கலந்து கொண்டனர்.

த.இ.க.கழகம் : கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் தொகுப்பமர்வு ஒளிப்படங்கள்

தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 24, 2046 / ஆக.09/2015   கலந்துரையாடல்  இரண்டாம் நாள் தொகுப்பமர்வு வரவேற்புரை : தமிழ்ப்பரிதி முன்னிலை : முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப. திரு நாகராசன் இ.ஆ.ப. நிறைவுரை : திரு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. நன்றியுரை : ஆழி.செந்தில்நாதன் படங்களைச் சொடுக்கிப் பெரிதாகக் காண்க.   காண்க: தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 23, 2046 / ஆக.08/2015   முதல் நாள் தொடக்க விழா கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் : நாள் 2 : ஒளிப்படங்கள்…

தேவதானப்பட்டியில் இலவசக் கண் மருத்துவ முகாம்

தேவதானப்பட்டியில் இலவசக் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. தேவதானப்பட்டியில் சாவெடு அறக்கட்டளை (SAWED Trust), தேனி அரவிந்து கண்மருத்துவ மனை இணைந்து இலவசக் கண் மருத்துவ முகாம் நடத்தினார்கள். இந்தக் கண்மருத்துவ முகாமில் சாவெடு அறக்கட்டளை நிறுவனர் எம்.எசு.அபுதாகிர், களப்பணியாளர்கள் ஞானசேகர், பிச்சை முத்து, அரவிந்து கண் மருத்துவமனையைச் சேர்ந்த செயராஜ,இராதா மணவாளன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இம்முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை, கண்ணில் நீர் வடிதல் முதலான நோய்களுக்குப் பண்டுவம் அளிக்கப்பட்டது. இம்முகாமில் ஏறத்தாழ 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில்…

கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் : நாள் 2 : ஒளிப்படங்கள் சில

தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 24, 2046 / ஆக.09/2015   இரண்டாம் நாள் முற்பகல் கற்பித்தல் அமர்வு படங்களைச் சொடுக்கிப் பெரிதாகக் காண்க. காண்க:தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 23, 2046 / ஆக.08/2015   முதல் நாள் தொடக்க விழா

வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் சங்கம விழா

   வட  அமெரிக்கத் தமிழ் விழா 2015    தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை[FeTNA – Federation of Tamil Sangams of North America] சார்பில் இந்த ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தில் சான் ஓசே [San Jose] நகரில் சீரும் சிறப்புமாக பேரவைத் தமிழ் விழா நடந்துள்ளது. இந்தத் தமிழர் மாநாட்டில் கிட்டத்தட்ட 2500 தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.   இரண்டு நாள் முழு நிகழ்வில் ஏராளமான தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கு ஏறியன. முதல் நாள் தமிழ்த்…

‘இனமானப் பேராசிரியர் வாழ்வும-தொண்டும்’ என்ற நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா   திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகம் சார்பில் பேராசிரியர் அ.ர.சனகன், முனைவர் ந.க.மங்கள முருகேசன் ஆகியோர் எழுதிய ‘இனமானப் பேராசிரியர் வாழ்வும் – தொண்டும்’ என்ற நூல் வெளியீட்டு விழா திராவிடர் கழகத்தலைமையகமான சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ஆடி 17, 2046 / ஆக.2.8.2015 மாலை 6 மணிக்கு வெகு சிறப்புடன் நடைபெற்றது.  நூல் வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் கலைஞர் தலைமை தாங்கினார்.   திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்…

த.இ.க.கழகம் : கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல்

தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 23, 2046 / ஆக.08/2015   முதல் நாள் தொடக்க விழா வரவேற்புரை : திரு நாகராசன் இ.ஆ.ப. அறிமுக உரை : திரு த.உதயச்சந்திரன்  இ.ஆ.ப. வாழ்த்துரை : முனைவர் பாசுகரன், துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம் திருவாட்டி  சபிதா இ.ஆ.ப. முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப.  நன்றியுரை : திரு தமிழ்ப்பரிதி முதல் அமர்வு முற்பகல்  மூன்றாம் அமர்வு பிற்பகல் ஒளிப்படங்கள் சில  

தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு

தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு     குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை உருவாக்கப் பணி, படிமப் பார்வைக் குழுவினரால் மீண்டும் ஆடி 16, 2046 / ஆக.01, 2015 அன்று மீண்டும் பார்வையிடப்பட்டது.   புலவர் த.சுந்தரராசன், புலவர் வெற்றியழகன், இலக்குவனார் திருவள்ளுவன், பாவலர் ம.கணபதி, அனகை நா.சிவன், நாஞ்சில் நடராசன், வளனரசன், தமிழ்த்தென்றல், திருவாட்டி அமுதநம்பி சோழன் நம்பியார், ஆகியோர் சிற்பி இரவியுடன் சிலைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாடினர். அவை வருமாறு: –…

நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா-12

நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா-12   நன்னன் குடி நிகழ்த்திய நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா தி.என்  இராசரத்தினம் கலையரங்கில்  தி.பி. 2046  ஆடித் திங்கள் 14 ஆம் பக்கல் / சூலை 30, 2015 மாலை 6 மணிக்கு முனைவர் தெ. ஞானசுந்தரம் தலைமையில்  நடைபெற்றது.   புலவர் மா.நன்னன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். 36  அகவையில் மரணம் அடைந்த தன் மகன்  மரு. அண்ணலின் அறிவுக்கூர்மை பற்றி எடுத்துக் கூறினார் ‘தமிழைத் தமிழாக்குவோம்’ என்னும் தேர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற…

தேவதானப்பட்டியில் அப்துல்கலாமிற்கு இரங்கல் கூட்டம் – சிறப்புத்தொழுகை

  தேவதானப்பட்டியில் முன்னாள் குடியரசு தலைவர் ஆ.ப.சை.அப்துல் கலாம் மறைவையொட்டி நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டது.   கடைகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டுக் கடைகள் அடைக்கப்பட்டன; சட்டைகளில் கருப்புத்துணி அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர். அதன்பின்னர் தேவதானப்பட்டி முசுலிம் சமாஅத்து, வணிகர்கள் சங்கம், அனைத்துக் கட்சிமுன்னணியினர் காந்தித்திடலில் அமைதிவணக்கம் செலுத்தினார்கள். அஞ்சலிக்கூட்டத்தில் தேவதானப்பட்டி பேரூராட்சித்;துணைத்தலைவர் பி.ஆர்இராசேந்திரன், தேவதானப்பட்டி சமாஅத்துத் தலைவர் அப்துல் கபார்கான் முதலான பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஊர்வலமாகப் பள்ளிவாசலை வந்தடைந்தனர்.பள்ளிவாசலில் சிறப்புத்தொழுகையும், வழிபாடும் நிகழ்த்தப்பட்டன. இச்சிறப்பு வழிபாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பாப்புலர் பிரண்ட்டு ஆப் இந்தியா,…

கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு

கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு கனடாவின் கியூபெக்கு மாநிலத்தில் மொன்றியல் கிழக்குப் பகுதியில் கடந்த ஆடி 02, 2046 / 18-07-2015 அன்று பலநாடுகள் பங்குகொண்ட பல்கலை நிகழ்வு 2015 (Quebec City Festivals and Events) நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 5 வருடங்களாக இலங்கைத் தமிழர்கள் தங்களின் கலை, பண்பாட்டினை பல்லின மக்களோடு பரிமாறும் பொருட்டு, கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் வருடா வருடம் பங்குகொண்டு பல கலை நிகழ்வுகளை மேற்கொண்டுவருகின்றது. ‘Festival d’été de Québec’ என்னும்…