சங்க இலக்கிய அறிமுகம் – நூல் வெளியீட்டு விழா

  சங்க இலக்கிய அறிமுகம் – நூல் வெளியீட்டு விழா தமிழ் இலக்கிய மன்றம் புழுதிவாக்கம் சென்னை 600 091 ஆடி 4 , 2045 / சூலை 20, 2014 ஞாயிறு மாலை 4.00 மணி அறிஞர் ஔவை நடராசன் பங்கேற்கிறார்.  

மாமூலனார் பாடல்கள் 26: சி.இலக்குவனார்

26. நீ செயலற்றது எதனால்? -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (ஆனி 22, 2045 / சூலை 06, 2014 இதழின் தொடர்ச்சி) 26 பாடல் அகநானூறு 359 பாலை பனிவார் உண்கணும் பசந்ததோளும் நனிபிறர் அறியச்சாஅய நாளும். கரந்தனம் உறையும் நம்பண்பு அறியார் நீடினர் மன்னோ காதலர் என நீ எவன் கையற்றனை இகுளை! அவரே வான வரம்பன் வெளியத்து அன்னநம் மாண்நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது அருஞ்சுரக்கவலை அசைஇய கோடியர் பெருங்கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு வீழ்பிடி…

மாமூலனார் பாடல்கள் 25: சி.இலக்குவனார்

உரு. எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! – தலைவி –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி) திருமணம் நிகழ்ந்தபின் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளான். பண்டைத் தமிழ்நாட்டில் திருமணம் நிகழ்ந்த சின்னாட்களில் தலைவன் தலைவியைப் பிரிதல் சிறப்புக்கல்வி பெறும்பொருட்டும், அரசியல் அலுவல் பொருட்டும். பொருளீட்டும் பொருட்டும் நிகழ்ந்தது. இப் பிரிவுகளைப்பற்றிய விரிவுகளைத் தொல்காப்பியர் இலக்கண நூலில் தெளிவுற அறியலாம். இப்பாடலில் வருகின்ற தலைவனும் அவ்வாறே பிரிந்து சென்றுள்ளான். தலைவனைப்பிரிந்த தலைவி வருந்துகின்றாள்….

மாமூலனார் பாடல்கள் 24: சி.இலக்குவனார்

  (ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) “கண்பனி நிறுத்தல் எளிதோ” – தலைவி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   உச பாடல். அகநானூறு 97    பாலை கள்ளி அம்காட்ட புள்ளி அம் பொறிக்கலை வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்குழி கடுமுடை இரவுக் குறும்பு அலற நூறி நிரைபகுத்து   இருங்கல் முடுக்கர்த் திற்றிகொண்டும் கொலையில் ஆடவர் போலப் பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து…

மாமூலனார் பாடல்கள் 23: சி.இலக்குவனார்

(வைகாசி 25,2045 / சூன் 8, 2014 இதழின் தொடர்ச்சி) உங. பெற்றதும் திரும்புவர் சற்றும் வருந்தேல் – தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தலைவன் பொருள் தேடச் சென்றபின் அவன் பிரிவை ஆறறியிருக்க முடியாது தலைவி வருந்துகின்றாள். தோழி ஆறுதல் கூறி விரைவில் திரும்பி விடுவானென்று உறுதி கூறுகின்றாள்) தோழி: அம்ம! நின் கை வளையல்கள் கழன்று கழன்று விழுகின்றனவே. எவ்வளவு இளைத்துப்போய் இருக்கின்றாய்? தலைவன் பிரிந்து சென்றதால் அல்லவா இவ்வளவு வாட்டம். தலைவி: ஆம்! என்…

மாமூலனார் பாடல்கள் – 22 : சி.இலக்குவனார்

  (வைகாசி 25, 2045 / 08 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) உஉ. “செய்வினை அவர்க்கே வாய்க்க” (தலைவனைப் பிரிந்த தலைவியும் தோழியும்) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தோழி: அம்ம! உன்னுடைய அழகு முழுவதும் இன்று எங்கு மறைந்தது? உன்மேனி பசலை (தேமல்) படர்கின்றதே. எல்லாம் அவர் பிரிவினால் அல்லவா? தலைவி: ஆம் தோழி. என் செய்வது? தெருவில் உள்ளோரும், ஊரில் உள்ளோரும் பேசும் பேச்செல்லாம் நம்மைப்பற்றிதான். அவர்கள் உரையாடல்கள் சேரலாதன் முரசுபோல் முழங்குகின்றன. தோழி: கடல்நடுவே…

மாமூலனார் பாடல்கள் – 21 : சி.இலக்குவனார்

(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) உக. “சில நாள் பொறுத்திருப்பாய்” – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     தலைவனும் தலைவியும் பகற்குறியினும் இரவுக் குறியினும் கண்டு மகிழ்ந்து கலந்து உரையாடிக் காதலைப் பெருக்கிவிட்டனர். தலைவியின் தாய் தலைவியின் ஒழுக்கத்தை உற்று நோக்கிக் கண்ணும் கருத்துமாய்க் காவல்புரிந்தாள். சிறைகாப்பு எவன் செயும். தலைவி சிறைப்பட்டவள் போல் ஆனாள். தலைவன் இந்நிலையை உணர்ந்து தலைவியைத் தன் ஊர்க்கு அழைத்துச் சென்று மணப்பதாகக் கூறினான். அவ்விதம்…

மாமூலனார் பாடல்கள் – 20 : சி.இலக்குவனார்

(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி) 20. சென்றோர் அன்பிலர் – தலைவி  தலைமகன் பிரிந்த பின்னர், தலைவியை நோக்கிக் கூறுகின்றாள். – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   தோழி! அவர் அன்பு அற்றவர் என்றுதான் நினைக்கிறேன். உயர்ந்து வளர்ந்துள்ள அடிமரங்களுடைய சிவந்த தளிர் பொருந்திய இருப்பை மரங்களிலிருந்து, தந்தத்தைக் கடைந்து செய்தால்போன்ற பூக்கள் உதிர்ந்துகிடக்கும் அவர் செல்லும் வழிகளில், அங்குக் கரடிக்கூட்டம் – குட்டிகளை ஈன்ற பெண் கரடிகள் –   ஆட்டு மந்தையைப்…

மாமூலனார் பாடல்கள் – 19 : சி.இலக்குவனார்

(சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி) ககூ. “நம்மிற்சிறந்தோர் இம்மை யுலகத்து இல்” (பிரிவின்கண் வேறுபட்ட தலைவியும் தோழியும்) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தலைவி: தோழி! அவர் அன்று கூறிய உரைகள் நினைவில் இருக்கின்றனவா? தோழி: ஆம் அம்ம! ஒரு தடவையல்ல; பல தடவை கூறியதாகக் கூறினீர்களே! அவ்வுரைகள்தாமே! தலைவி: ஆம், “நம்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல்” என்பதுதான். தோழி: “நம்மைவிட அன்பில் சிறந்தவர்கள் இந்த உலகத்தில் இல்லை” என்று அவர்…

மாமூலனார் பாடல்கள் – 18 : சி.இலக்குவனார்

   (சித்திரை 21, தி.ஆ.2045 / 06, மே 04, 2014 இதழின் தொடர்ச்சி) 18. பழிதீர்மாண் நலம் தருகுவர் – தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியை நோக்கித் தோழி கூறுகின்றாள்: மழைக்காலத்தில் பூக்கும் பிச்சிப் பூப்போன்ற கண்களையும் மணம் வீசும் கூந்தலையுமுடைய நல்லாய்! தலைவர்  வேற்றுநாடுதான் சென்றுள்ளார். வீரக்கழலை அணிந்துள்ள புல்லி என்பானின் பாதுகாவலுக்குட்பட்டுள்ள வேங்கடமலையைக் கடந்துதான் செல்ல வேண்டும். அம்மலைப் பக்கங்களில் நீர் என்பதே இராது. மலையில் உள்ள…

மாமூலனார் பாடல்கள் – 17 : சி.இலக்குவனார்

 (சித்திரை 14, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 27, 2014 இதழின் தொடர்ச்சி) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     கஎ. செய்வது என்ன என்று ஆராய்வாய்” – தலைவி   பிரிந்த தலைவன் வரவில்லையே என வருந்தினாள் தலைவி. தலைவியின் வருத்தம்கண்ட தோழியும் மிகவும் வருந்தினாள். அத்தோழியை நோக்கித் தலைவி கூறுகின்றாள்.    அன்புள்ள தோழியே! அவர் (தலைவர்) பிரிவேன் என்றார் அன்று கூறிய  மொழி – ஓயாது கூறிய உறுதிமொழி – “நின்னை விட்டுப் பிரியேன்;…

மாமூலனார் பாடல்கள் – 16 : சி.இலக்குவனார்

(சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி) ககூ. இமயச் செவ்வரை  மானும் கொல்லோ! – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்    பெறலரும் தலைவியைச் சிறப்புற மணந்த தலைவன் சென்றான் பொருள் தேட. ஏன்? பொருளின்றி இரந்தோர்க்கு ஈயாமல் இருத்தல் இழிவென்று கருதி, பெருஞ்செல்வம் தேடச் சென்றான். தலைவன் பிரிவால் தலைவி வருந்தினாள். தோழியர் கூடினர். ஆறுதல் கூறுகின்றனர்.  தோழி: அவர் தேடச் சென்ற பொருள் நம் தலைவியை விட உறுதி தரக்கூடியதா?  இன்னொரு…