இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி வடமொழிச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள்தாமும் அச் சொற்களை ஆடம்பரப் பொருளாகவும் அழகு தரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாக மதிப்பதில்லை. ஆதலின் அவற்றை அறவே கைவிட்டு வாழவல்லவாம் என்பதை அவர்கள்- கீழைநாட்டு மொழிநூல் அறிஞர்கள் -அறிந்தவரல்லர். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தம்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு வடமொழிச் சொற்களை அளவுக்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி சொல் பழம்பொருள் புதுப்பொருள் அகம் உள்,மனம் கருவம் அகலம் மார்பு இடத்தின் பரப்பு அவல் பள்ளம் தின்னும் அவல் இயம்புதல் ஒலித்தல் சொல்லுதல் கண்ணி அடையாள மாலை வலை கருவி தொகுதி ஆயுதம் கிழவன் உரியவன் முதியவன் கோடை மேல்காற்று வெயிற்காலம் சாறு திருவிழா …
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் ஒரு சொல் ஒரு பொருளையே உணர்த்துவதுதான் முறை. ஒரு சொல் தோன்றுங்காலத்து ஒரு பொருளை உணர்த்தவே தோன்றியது. ஆனால் காலப்போக்கில் ஒரு சொல் பல பொருளை உணர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மாந்தரின் சோம்பரும், புதிய சொல் படைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இன்மையும், இந் நிலை ஏற்படக் காரணங்களாக இருக்கலாம். கடி என்னும் கிளவி தொல்காப்பியர் காலத்தில் பன்னிரண்டு பொருள்களை உணர்த்தும் நிலையை அடைந்துள்ளது. கடியென் கிளவி …
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொல்காப்பியத்தை புறக்கணிப்பது ஏன்? – இன்மதியில் இலக்குவனார் திருவள்ளுவன்
by Inmathi Staff | சன 5, 2022 | கல்வி ஒன்றிய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தொல்காப்பியத்துக்கு இடமில்லையே ஏன்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் தமிழ்த்தாள் கட்டயாமாக்கப்பட்டிருப்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவரான இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழ் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை அரசு உருவாக்கியிருப்பதில் எனக்கும் இரட்டை மகிழ்ச்சி. தமிழறியாதவர்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் பணியில் அமர்ந்து கொண்டு, மக்களுக்கும் அரசிற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக்…
தமிழர் பழக்க வழக்கங்கள் 1 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 23 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 24 13. பழக்க வழக்கங்கள் மக்கள் அன்றாடம் வாழ்வில் கொள்ளும் பழக்கங்கள் வழக்கங்களாக அமைந்து பின்னர் அவையே நாகரிகப் பண்பாட்டுச் செயல்முறைகளாக மாறிவிடுகின்றன. எல்லாப் பழக்கவழக்கங்களும் அவ்வாறு அமைந்து நிலைத்து நிற்கும் என்று கூறுவதற்கின்று. இப் பழக்க வழக்கங்கள் என்றும் ஒருதன்மையாய் இருக்கும் என்றும் கூற இயலாது. சில மறையும்; சில தோன்றும். உயர்பண்பாட்டுக் குரியனவாய் உள்ளன மட்டும் காலவெள்ளத்தைக் கடந்து…
தொல்காப்பியச் சிறப்புப் பொழிவு – மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்
மருதநாயகத்தின் தொல்காப்பியப் பார்வை
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 29/ 69 இன் தொடர்ச்சி)
தொல்காப்பியர் நாள் அறிமுக விழா, வ.அ.த.ச.பேரவை
தொல்காப்பியர் மன்றத்தின் திங்கள் கருத்தரங்கம், கனடா
மாசி 27, 2048 / மார்ச்சு 11, 2017 முற்பகல் 9.30 தொல்காப்பியர் மன்றம், கனடா
தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 – தி.வே. விசயலட்சுமி
தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 பண்டைத் தமிழரின் விழுமிய வாழ்வு சிறந்த பண்பாட்டையும் செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களையும் தோற்றுவித்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும். பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல் தொல்காப்பியமாகும். தமிழுக்கும், தமிழினத்திற்கு முதனூல். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றியனவாகச் சில நூல்கள் இருப்பினும், அந்நூல்களைப்பற்றி நாம் ஒன்றும் அறியக் கூடவில்லை. இடைக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது. தொல்காப்பியனார் குறித்த வரலாறுபற்றிப் பலசெய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச்…
அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! – கருமலைத்தமிழாழன்
அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! [தொல்காப்பியர் சிலை திறப்பு விழா கவியரங்கம் இடம் – காப்பிக்காடு (நாகர்கோவில்) நாள்: 26.06.2047 10-07 -2016 தலைமை – கவிஞர் குமரிச்செழியன்] தமிழ்த்தாய் வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும் காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும் வீழாத தமிழன்னையை …
காதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
காதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்! காதல் என்பது வாழ்வியல் அறம். ஆனால், இரு மனமும் ஒத்து, நல் ஒழுக்கத்துடன் சிறந்து வாழும்பொழுதுதான் காதல் என்பது அறமாகிறது. உண்மைக்காதல் அவ்வாறுதான் இருக்கும். ஆனால், ஆசை, ஈடுபாடு, ஈர்ப்பு, முதலியவற்றையும் காதலாக எண்ணுவதுதான் குழப்பங்களுக்கும் குற்றங்களுக்கும் காரணமாய் அமைகின்றது. மாந்த இனம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே காதல் உணர்வும் தோன்றியுள்ளது. காதல் தோன்றியபொழுதே ஒரு தலைக்காதலும் தோன்றியுள்ளது. ஆனால், முன்பெல்லாம் ஒரு தலைக்காதல்வயப்பட்டவர்கள், காதல் நிறைவேறத் தங்களைத்தான் வருத்திக் கொண்டார்கள். இப்பொழுது தான்விரும்பி…