மெய்ப்பாட்டாராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை! – பேரா.சி.இலக்குவனார்

மெய்ப்பாட்டாராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை!   இலக்கிய மாந்தர்கள் உள்ள உணர்ச்சியால் உந்தப்படுகின்றகாலை எவ்வாறு சொல்லோவியப் படுத்துதல் வேண்டும் என்பதற்கு மெய்ப்பாட்டியல் மிகவும் துணைபுரியும். இவ்வகையான ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை என்றே கூறலாம். வடமொழியில் நடனம் பற்றிய மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன. அவையும் தமிழ் நூல்களைப் பின்பற்றியனவேயாம். இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய ஆராய்ச்சிக்கும் உரியனவாகக் கூறப்பட்டுள்ள மெய்ப்பாடுகள் பற்றிய இவ்வியல் முழுதும் கிடைக்கப் பெற்றிலதோ என்று ஐயுற வேண்டியுள்ளது. ஒவ்வொரு இயலிலும் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய விளக்கம் கூறிய பின்னர், வகை கூறத்…

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்.  “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல்.” இவ்வாறு பேராசிரியர் கூறியுள்ளார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடு என்பது தான் “மெய்ப்பாடு” என்பதன் பொருள். புளியை உண்டால் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப முகம் சுளிக்கின்றது. எதிர்பாராத விதமாக அருகில் அரவம் இருக்கக் கண்டால் அஞ்சுகின்றோம். அவ் வச்சத்தால் ஏற்படும் உணர்ச்சிக்கேற்ப உடல் நடுங்குகின்றது. இலக்கியத்தைப் படிக்கும்போதும் இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது. அவ்வுணர்ச்சிக்கேற்ப…

“செவியறி வுறூஉ”, “வாயுறை வாழ்த்து”- பிறரைத் திருத்துவதற்காகப் பாடுவனவே.

“செவியறி வுறூஉ”, “வாயுறை வாழ்த்து” என்பன புலவர்கள் பிறரைத் திருத்துவதற்காகப் பாடுவனவே.      மேனாட்டில் அரசியலறிஞர்கள் பலர் – உரூசோ, காரல் மார்க்சு, பெயின், மெக்காலே போன்றவர்கள் – அவர்தம் காலத்து அரசைத் திருத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள், இன்று பேரிலக்கியங்களாய்த் திகழ்கின்றன. அவ்வாறே, தமிழ் நாட்டிலும் அரசைத் திருத்த – நல்வழிப்படுத்த – செங்கோலாட்சி புரியக் கூறிய கருத்து நிறைந்த பாடல்கள் பேரிலக்கியப் பகுப்பினுள் அடங்குவனவாய் உள்ளன. புலவர்கள் பொருள் கருதிப் புகழ்ந்து பொய்வாழ்வு நடாத்தினர் என்று கருதுதல் கொடிது. இடித்துரைத்து மக்களுக்கு…

பாடலியற்றுவோர் பலநூல்புலமை பெற்றிருக்க வேண்டும்! – சி.இலக்குவனார்

   பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது. நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும். அவர்களே வழுவின்றி யாவரும் விரும்ப எக்காலத்தும் நிலைத்து நிற்குமாறு இலக்கியம் இயற்றுதல் இயலும். கற்பித்துக் கூறும் நாடக வழக்காயினும், கண்ணாற் காணும் உலகியல் வழக்காயினும் முற்றும் கற்றுத் துறை போய புலவர்களே செம்மையுற இயற்றுதல் இயலும். தொல்காப்பியர்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த புலவர்களில் பலர் அன்ன மாட்சியினை உடையராய்…

தெய்வம் தமிழ்ச்சொல்லே! –

  சிலர் தெய்வம் வேறு; கடவுள் வேறு என்பர். சிலர் தெய்வம் வட சொல், கடவுள் தென் சொல் என்பர். தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே. தெய்வமும், கடவுளும் ஒன்றே. ‘தெய்வம்’ என்ற சொல் ‘தேய்’ என்பதினின்றும் தோன்றியிருக்கக் கூடும். உயிர்களின் துன்பத்தைத் தேய்ப்பது தெய்வம். மக்கள் கடவுளை நினைக்கத் தொடங்கியது தம் துன்ப நீக்கத்திற்காகவே. இன்றும் பலர் கடவுளை நினைப்பது தமக்குத் துன்பம் வரும் காலத்தினால் தான். ஆதலின் ‘தெய்வம்’ எனும் தமிழ்ச் சொல் ‘தேய்’ என்ற அடியினின்று தோன்றியதாகக் கொள்ளலாம்….

தமிழர்க்கே உரிய கடவுட் கொள்கை -சி.இலக்குவனார்

  ஒரு பெயர் ஓருருவம் ஓன்றுமில்லாக் கடவுளுக்குப் பல பெயர்களிட்டுப் பல வழியாக வழிபடுதல் தமிழர் இயல்பு. பெயர் பலவாயினும் கடவுள் ஒருவரே என்ற உணர்வு தமிழர்க்கு என்றும் உண்டு. இந்நூற்பாவில் கூறப்பட்டுள்ள மாயோன், சேயோன், வேந்தன், வருணன் முதலியனவும் ஒரு கடவுளைச் சுட்டுவனவே. மாயோன் என்றால் அழியாதவன்; சேயோன் என்றால் சேய்மையிலுள்ளவன்; அறிவுக்கு எட்டாதவன்; வேந்தன் என்றால் தலைவன், விரும்புதற்குரியவன். வருணன் என்றால் நிறங்களுக்குரியவன் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் நான்கு பெயர்களும் ஒருவரையே குறிக்கின்றன என்று தெளியலாம்….

தமிழ் ஆரியத்திற்கும் தாயே! – பேரா.சி.இலக்குவனார்

இந்திய மொழிகளின் தாயாம் தமிழ் ஆரியத்திற்கும் தாயே!             இவ்வாறு தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச்சொல்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படுகின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல்காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil : pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ்வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பியரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத்திரியார்…

என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு வியப்பிறந்தது – பேரா.சி.இலக்குவனார்

  என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது. ” முதல் எனப்படுவது நிலம் பொழுதும் இரண்டின்                  இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே ” என்பர் ஆசிரியர். உலகத்திற்கு முதன்மையாக இருப்பன இவையே யன்றோ ! இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டன என்று வரையறுத்துக் கூற முடியாத இயல்பினவாக இருக்கின்றன. இடமும் காலமும் என்றும் உள்ளனவாதல் வேண்டும். ஆகவே என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது ஆகின்றது. பேரா.சி.இலக்குவனார்:…

ஐந்திணைப் பகுப்பு தமிழர்க்கே உரியது! – சி.இலக்குவனார்

    ஐந்திணைகளாக உலகத்தைப் பிரித்தனர். ஐந்திணைகளே இலக்கியத்திற்குரியனவா யிருந்தன. இவை முதல், கரு, உரி என முப்பெரும் பிரிவை உடையனவாய் இருந்தன. ஒவ்வொரு திணைக்கும் முதல், கரு, உரி என்பன தனித்தனியே வரையறுக்கப்பட்டன. பேராசிரியர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 133

பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும்! – சி.இலக்குவனார்

  எழுத்தைப் பற்றியும் சொல்லைப் பற்றியும் விரிவாக உரைத்த ஆசிரியர் தொல்காப்பியனார், எழுத்தால் ஆக்கப்பட்ட சொற்றொடர் கருவியாக அறியப்படும் பொருளைப் பற்றி உரைப்பதுவே அவர் நூலின் மூன்றாம் பகுதியாகும். எழுத்தும் சொல்லும் மொழியைப் பற்றியன. மொழியைத் திருத்தமாக நன்கு பயன்படுத்த மொழி நூலறிவு வேண்டும். திருத்தமுற்ற மொழியின் செம்மைப் பண்பு நிலைத்திருக்க அம்மொழியில் உரையும், பாட்டும் தோன்றுதல்வேண்டும். அவ்வாறு தோன்றும் உரையும் பாட்டுமே இலக்கியம் எனப்பட்டன. பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும். ஒரு மொழிக்கு வளமும், வாழ்வும் அளிப்பது இலக்கியமே. இலக்கியம் தோன்றப்…

பன்னிரு மாதங்களும் தமிழ்ப்பெயர்களே! – சி.இலக்குவனார்

  கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம். இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன….

காதல்வாழ்வே இலக்கியத்தோற்றத்தின் விளைநிலம் – சி.இலக்குவனார்

       காதல் என்பது நாகரிகப் பண்பாட்டின் அளவு தெரிவிக்கும் உரைகல் என்றும் உரைக்கலாகும். சாதி மத நிலை வேறுபாடற்ற மக்களின் வாழ்வின் நிலைக்களமும், ஆண் பெண் சமத்துவ உரிமைப் பண்பும் காதலே. அக்காதல் வாழ்வே இலக்கியத் தோற்றத்திற்கு உரிய விளை நிலமாதலின் அது பற்றி இலக்கியத்தில் கூறும் மரபுகளைத் தொகுத்துரைப்பதே அகத்திணையியலாகும். செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 129-130