நவோதயா வேண்டாம்! நாம் என்ன செய்ய வேண்டும்? – நக்கீரன் செவ்விகள்
நவோதயா வேண்டாம்! நாம் என்ன செய்ய வேண்டும்? “தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை மாவட்டம்தோறும் தொடங்கத் தடையில்லாச் சான்றிதழையும் 30 காணி (ஏக்கர்) நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கித் தர வேண்டும்” என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அதிரடி ஆணை அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் போன்றோரைக் கொந்தளிக்க வைத்துள்ளது. ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’யின் தலைவர் வேல்முருகன் அவர்கள், “முதலில் மருத்துவ நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவம் முதலான உயர்கல்வியைத் தமிழர்களுக்கு மறுக்கும் சூழ்ச்சி எனில், நவோதயாப் பள்ளிகளோ அடிப்படைப்…
காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார் பழனிசாமி, காயத்திரி மனோகரன், தமிழரசி இளங்கோவன்
காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு (பாடல்கள்). 1/2 மலேசியாவில் தமிழர் பண்பாடு பல காலமாக வளர்ந்து வேரூன்றியது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பண்பாடுகளில் பல காலத்தால் அழிந்துவிட்டன. விடுதலைக்குப் பின்பு பல பண்பாடுகள் கால ஓட்டத்தால் இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டன, இவற்றுள் குறிப்பிடத்தக்கது தமிழ்ப்பள்ளிகளில் வழக்கத்திலிருந்த பல பண்பாட்டு நடவடிக்கைகளாகும். அவற்றுள் பாடல்கள், விளையாட்டுகள், பள்ளியின் அமைப்பு, பெற்றோர் ஆசிரியர் ஈடுபாடு ஆகியன குறிப்பிடத்தக்கன. இக்கருத்தாய்வில் அந்தக் காலத்தில் பள்ளியில் பாடப்பெற்ற சில பாடல்களையும் பள்ளிகளில் மேற்கொண்ட சில…
கல்வி கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்) – பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் வகுப்பு)
கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்) முன்னுரை நம் நாடான மலேசியா, கல்வித்துறையில் அறைகூவல்களை எதிர்கொள்ள நாட்டின் கல்வித்துறையில் புது உத்தி(வியூகங்)களை மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின் உயிர்நாடி 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் அணுகுமுறையாகும். இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாணவனும் தொழில் நுட்பக் கற்றலில் பீடு நடை போடுவது இன்றியமையாததாகும்.. ஆகவே இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சிநிலையில் தமிழ்ப்பள்ளியும் அடங்கும் என்பது காலத்தின் விதியாகும். கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பக் கூறுகள் பள்ளி ஒளிபரப்பு…
இதழாளர் மகாதேவா நினைவுச் சிறுகதைப்போட்டி – பரிசளிப்பு விழா
ஆவணி 25, 2048 / ஞாயிறு / 10.09.2017 மாலை 5.30 இதழாளர் மகாதேவா ஐயா நினைவுப் பன்னாட்டுச் சிறுகதைப்போட்டி : பரிசளிப்பு விழா, திருச்சிராப்பள்ளி
முகிலை இராசபாண்டியனின் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு 26
ஆவணி 25, 2048 ஞாயிறு 10.09.2017 மாலை 5.00 நேரு அரசு மேனிலைப்பள்ளி கல்லூரிச் சாலை, நங்கநல்லூர் ஞாலம் இலக்கிய இயக்கம் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு 26 திருநாவுக்கரசர் 3 : தொடர் பொழிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் தலைமை : கவிமாமணி க.குணசேகரன்
நாற்பத்து மூன்றாம் ஆண்டு கம்பன் விழா, சென்னை
ஆடி 26-28, 2048 * மயிலாப்பூர் * ஆகத்து 11-13, 2017
யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8 – கருமலைத்தமிழாழன்
(யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8 காடுகளாய் நம்முன்னோர் வளர்த்து வைத்துக் கவின்மிகுந்த மரங்களினை வெட்டி வெட்டிக் கோடுகளாய் மண்ணுடலைப் பிளக்க வைத்துக் கொட்டிவந்த மழைவளத்தை அழித்த போல வாடுகின்ற பயிர்கண்டு வாட்டம் கொண்ட வள்ளலாரின் மனிதநேயம் அழித்து விட்டோம் பாடுபட்டு யாதும்ஊர் என்ற பண்பைப் பாதுகாத்துத் தந்ததனைத் தொலைத்து விட்டோம் ! பக்கத்தில் குடியிருப்போர் முகத்தைக் கூடப் பார்க்காமல் வாழுகின்ற வகையைக் கற்றோம் துக்கத்தில் துடிப்போரின் குரலைக் கேட்டும்…
மாணிக்க விழுமியங்கள் – முன்பதிவுத்திட்டம்
தமிழ்மண்பதிப்பகத்தின் வ.சுப.மாணிக்கம் நூல்கள் மாணிக்க விழுமியங்கள் – முன்பதிவுத்திட்டம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 – கருமலைத்தமிழாழன்
(யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 அவையோர் வணக்கம் மாநாட்டை அமைத்தளித்த முத்துசிதம்பர சான்றோரை மாநாட்டில் பங்கேற்ற மாத்தமிழ் பேராளர் மன்றில் கவிபாடும் கவிஞர்கள் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன் கவியரங்கக் கவிதை ஈரமண்ணாய் மனம்கசிந்து வீட்டுப் பக்கம் இருப்போரின் துயரினிலும் பங்கு கொண்டு வேரடியாய் அன்புதனில் கிளைய ணைத்து வெறுப்பின்றிக் கூட்டமாக ஒன்றி ணைந்து தூரத்தே அடிபட்டு வீழ்ந்த வர்க்கும் துடிதுடித்தே ஓடிப்போய் உதவி செய்தும் பாரத்தைப் பிறருக்காய் சுமந்து நின்ற…
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரான, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கி.பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆடி 10, 2048 / 26.07.2017 அன்று தலைமைச் செயலகத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஐந்தாம் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திட்டங்கள், செயற்பாடுகள், பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அண்மையில் ஊடகங்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருவாரூர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில்…
விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி
விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி [படங்களை அழுத்தின் சற்றுப்பெரிய அளவில் காணலாம்.]
கூட்டம் போடும் கூச்சல்! – கெருசோம் செல்லையா
கூட்டம் போடும் கூச்சல்! கூட்டம் போடும் கூச்சலுக்கிணங்கி, கொடுக்கும் தீர்ப்பு அறமாமோ? ஆட்டம் போடும் தலைகளுக்கடங்கி, அடிமையாதலும் திறமாமோ? மாட்டிற்காகப் பொங்கும் மக்கள், மனிதரைக் கொல்தல் முறையாமோ? வேட்டை நாய்போல் வெறியும் திரும்பும், விண்ணின் அறத்தில் குறையாமோ? – கெருசோம் செல்லையா
