கவிக்கொண்டல் விழா – ஒளிப்படங்கள்

செய்திக்கு : கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம். [embpicasa id=”6313078109669028289″]

புசல்லாவ சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின் “குரு பூர்ணிமா பூசை”

புசல்லாவ  சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின் “குரு பூர்ணிமா பூசை”   ஆடி மாதத்தில் வரும் முழு நிலவு நாள் அன்று சீடர்கள் தங்களுக்குக் கல்வி புகட்டிய குருவைப் போற்றும் முகமாகக் குரு வழிபாடு எனும் குரு பூசை செய்வதே குரு பூர்ணிமா எனப்படும். அந்த வகையில்  புசல்லாவ  சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையும் இந்து இறைஞர் மன்றமும் இணைந்து குரு பூர்ணிமா பூசையை ஆடி 04, 2047 / சூலை 19, 2016 அன்று நடாத்தியது.   இதில்  தலைமை விருந்தினராக மத்திய…

மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித்தேர்த்திருவிழா

  மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித் தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய  சிற்றூர்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்  மன்பதை மேம்பாட்டு(சமுதாய அபிவிருத்தி) அமைச்சர் பழனி திகாம்பரம் மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  ரோகினி கவிரட்ன  முதலானவர்கள் கலந்துகொண்டனர்.

காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலை திறப்பு விழா – நிகழ்ச்சிப் படங்கள்

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6306482064070265953″]   படங்கள் நன்றி : தினமணி இலாசர்,  பெங்களூர் மு.மீனாட்சி சுந்தரம், கருங்கல் கண்ணன், அகரம்

பசும்பொன் நுண்கலைக்கழகப் படத்திறப்பு நிகழ்வுப் படங்கள்

திருமிகு எசு.ஆர்.கருப்பண்ணன் இ.ஆ.ப.(ஓய்வு) தாமரைத்திரு மனோரமா பொறியாளர் பொன்னையா ஆகியோர் படத்திறப்பு ஆனி 19, 2047 / 03-07-2016 காலை 10.00   [embpicasa id=”6305203207396406129″]

மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் வருகை

  மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் அண்மையில்  வருகை புரிந்தார்.  அதுபோது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களுடன் பாடசாலையின்  மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார். சத்தி சாயி பாடசாலையானது தேசியக் கல்வி முறையைப் பின்பற்றுகின்றது. இப்பாடசாலை இலங்கையில் காணப்படும் சத்திய சாயி பாபா பாடசாலைகளில் ஒரு  முதன்மைப் பாடசாலையாகக் காணப்படுகின்றது. இங்கு இருமொழி கற்கை நெறி நடைபெறுவதோடு  மேலதிகக் கல்விசார் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கின்றது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

கல்வெட்டில் முதல்திருக்குறள்

  சென்னை குறள்மலைச்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில்உள்ள மலையப்பாளையத்தில் உள்ள உதயகிரி முத்துவேலாயுதசாமி கோவிலில் கல்வெட்டில் முதல்திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.   2047 ஆனி 19  / 2016 சூலை அன்று கல்வெட்டில் முதல் குறள் திறப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் இ.வி.ஆ.மை.(இசுரோ) இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு கல்வெட்டில் முதல் திருக்குறளை அறங்கேற்றம் செய்து பேசினார்.   திருக்குறளை  நாள்தோறும் படிக்க வேண்டும். அதைப்புரிந்து கொண்டு, அதன்படி நாம்வாழ்க்கையில் வாழ வேண்டும். இங்கே திருக்குறள் கல்லில் பதியப்பட்டிருப்பது போல்,…

தகவலாற்றுப்படை : தொடர் சொற்பொழிவு-15

தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின் கீழ்) தொடர் சொற்பொழிவு-15 “திரௌபதி அம்மன் வழிபாட்டில் சமயம் எனும் அமைப்பு” என்னும் தலைப்பில் பேராசிரியர் இரா. சீனிவாசன் (பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை.)  உரையாற்றுகிறார்.    ஆனி 31, 2047 / 15.07.2016, வெள்ளிக்கிழமை                  மாலை 4.00 மணி   தமிழ் இணையக் கல்விக்கழகம், கலையரங்கம்  அனைவரும் வருக!   பேராசிரியர் இரா. சீனிவாசன் குறித்து  ஆய்வாளர், பதிப்பாசிரியர், ஆசிரியர், கல்வியாளர், இதழ் ஆசிரியர், நாட்டார்…

மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம்

மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் திரு. செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் மிகவும் விரிவாகவும் ஆழங்குன்றாமலும் ஓர் அறிவியல் மின்னூல் படைத்துள்ளார். அதன் தலைப்பு: கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் 316 பக்கம் கொண்ட விரிவான நூல். முழுக்கவும் படிக்காவிடினும் அதை இங்கும் அங்குமாகவாவது முழுதுமாகப் பாருங்கள். நான் பார்த்து மிகவும் வியந்தேன், மிகவும் நெகிழ்ந்தேன். வாழ்க ஆசிரியர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள். இவர் முன்னர் வேதிவினையியல் அறிவியலறிஞராக இருந்தவர். இவர் ”Structural Bioinformatics Inc” என்னும் நிறுவனத்தில் தலைமை அறிவியலாளராக…

நெய்தல் நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்

நெய்தல் நிலத்தார் உணவு  ஒய்மானாட்டு நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச்சியையும் உட்கொண்டனர். (சி.ஆ.படை அடி:156-163). தொண்டை நாட்டுப் பட்டினத்தில் (இக்கால மாமல்லபுரத்தில்) நெல்லை இடித்த மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்தனர். அங்ஙனம் கொழுத்த ஆண் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியைச் சமைத்து உண்டனர். களிப்பு மிகுந்த கள்ளைப் பருகினர். (பெ.ஆ.படை அடி:339-345). காவிரிப்பூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை ஆகிய இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (ப.பாலை அடி:63-64). பனங்கள்ளை உட்கொண்டனர்….

ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா

எழுத்தாளர் கவிஞர் ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா   கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் நால்வருக்கு விருது வழங்கும் விழாவுமான முப்பெரும் விழாவில்  ஆதிரை முல்லையின்  “உச்சிதனை முகர்ந்தால்” என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.   திரைப்பட நடிகர்  இராசேசு தலைமை வகித்தார். கலைமாமணி பிறைசூடன்  நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். இலக்கிய வள்ளல் மாம்பலம் பாரி சந்திரசேகர்  நூல்களைப் பெற்றுக்கொண்டார்.   கவியரசரின் திருக்குமரன் அண்ணாமலை கண்ணதாசன் நிகழ்வில் முன்னிலை வகித்தார். [படங்களை அழுத்தின் பெரியஅளவில் காணலாம்.]

மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்

மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்   “கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்டபொழுது அதில் பாகுபாடு காட்டப்பட்டது. பெரும்பான்மைக் கல்விக்கூடங்களுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. அனைத்துக் கல்விக்கூடங்களுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது. அதற்காகத் தமிழ் அமைச்சர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். எனவே, எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை. இதனை எமது மாணவர்களும் ஆசிரியர்களும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன்…