வெருளி நோய்கள் 484-488: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 479-483 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 484-488 உமிழ்நீர் அல்லது எச்சில் துப்புவது குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் எச்சில் வெருளி.தங்கள் மீது பிறர் எச்சில் படுவதால் மட்டுமல்ல, தங்கள் எச்சில் வடிந்து தங்கள்மேல் பட்டாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.வாயிலிருக்கும் உமிழ்நீர் தானாக வெளியேறும் பொழுது எச்சில் வடிதலாகவும் நாமாக வெளியேற்றும் பொழுது எச்சில் துப்புவதாகவும் அமைந்து விடுகிறது.பயணங்களில் அடுத்தவர் மீது விழும் வகையில் எச்சில் வடியத் தூங்குபவர் உள்ளனர். எனவே, அடுத்து இருப்பவர் பேரச்சத்திற்கு ஆளாகிறார். எனினும் இது துயில்எச்சில் வெருளி(aquadormophobia)…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 : Conference  Call – பன்முகஅழைப்பு : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10 : conference, seminar, symposium – தமிழில் . . . -தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 Conference  Call – பன்முகஅழைப்பு Conference  Call என்றால் என்ன?  Conference  Call என்றால் நேர் பெயர்ப்பாகப் பலரும் மாநாட்டு அழைப்பு என்றே பயன்படுத்துகிறார்கள். சிலர் கலந்துரையாடல் அழைப்பு என்கிறார்கள். சிலர் கூட்டுத் தொலைபேசி உரையாடல் என்கிறார்கள். இது பேசுவதாகவும் இருக்கலாம், காணுரையாகவும் இருக்கலாம். இடைக்கால இலத்தீனிலும் இடைக்கால் ஃபிரெஞ்சிலும் con- என்றால்…

சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010  1006. Authorities           அதிகார அமைப்புகள்‌ ஒரு பொருண்மை தொடர்பில் செயற்பட, முடிவுகளை எடுக்க, உத்தரவுகளைப் பிறப்பிக்க, இசைவுகளை வழங்க, முறையான சட்ட பூர்வ அதிகாரம் கொண்ட அமைப்புகள் 1007. Authority inferior                கீழ்நிலை  அதிகாரி   எந்தப் பதவியாக இருந்தாலும் அந்தப் பதவிக்குச் சார்நிலையிலுள்ள அதிகாரி  1008. Authority, power and           அதிகாரமும்‌ அதிகார உரிமையும்‌ Authority  என்றால் சான்று வலிமை, இசைவு, அதிகாரமுடையவர், அதிகாரக்குழு,…

சாதி எதிர்ப்புப் போராளி சிவகங்கை இராமச்சந்திரனாரின் முன் மாதிரிச் செயல்.

பகுத்தறிவுச் சுடர் சிவகங்கை இராமச்சந்திரன் சாதிக்கு எதிராக வாய்ப்பேச்சு மட்டும் பேசவில்லை. பிள்ளைகள் சான்றிதழ்களிலேயே சாதியைக் குறிப்பிடவில்லை. தன் மகன் தியாகராசன் சான்றிதழில் அவர் சாதியைக் குறிப்பிடவில்லை. எனினும் பிராமணர் அல்லாதார்  எனக் குறிப்பிட்டுள்ளார்  அவருடைய பள்ளி இறுதி வகுப்புச்சான்றிதழ் இதோ மேலே உள்ள சான்றிதழின்படி.

தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியமும் பாணினியமும் முன்னுரை கனடாவில்  முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ‘தொல்காப்பியமும் பாணினியமும்’ என்னும் கட்டுரையை அனுப்பியிருந்தேன். நான் பொதுவாகக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும்போது விரிவான கட்டுரையை  அனுப்பிவிட்டு அதன் பின்னரே சுருக்கத்தை எழுதியனுப்புவது வழக்கம். ஏனெனில்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4  தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5 இவ்வாறு செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் தொடர்கள் சிலவற்றைப் பார்ப்போம். 50.      ஊழியர்களைத் தேர்வு செய்தனர். 51.      16 பேரைக் கைது செய்தனர். 52.      புதிய ஆட்களைத் தேர்ந்தெடுத்தனர். 53.      நடவடிக்கையைக் கைவிடு. 54.      விடுமுறையைக் குறை.    55.      புதுமுறையைப் பின்பற்று. 56.      நடைமுறையைக் கவனி. 57.      அமைப்பைச் சேர்ந்தவர்கள். 58.      கோசுட்டியைச் சேர்ந்தவர்கள்.   59.      கும்பலைச் சேர்ந்தவர்கள். 60.      தமிழகத்தைக் கடும் வெயில் வாட்டுகிறது. 61.      நிதியுதவியைப் பெற்றுக் கொண்டார். 62.      ஆகியவற்றைப் பார்வையிட்டார். 63.      போட்டியிடாததைத் தொடர்ந்து … 64.      பெயரைப் பரிந்துரைத்தால் …    65.      பயிர்களைச்…

க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார்

(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?) ஆ. தமிழர்க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் பண்டைத் தமிழர் அறிவியலறிவு படைத்தவராக இருந்தனர் என்பதைத் தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் இலைமறைகாய் போலப் பரவலாகக் காணலாம். ஏன்? சில சொற்கள் கூட அறிவியல் கருத்துகள் பொதிந்தனவாக உள்ளனவென்பது நுணுகிக் காண்பார்க்குப் புலனாகும். தமிழ்ச்சொற்கள் யாவும் பொருள் குறித்தனவே என்பதை ஒல்காப்புகழ்த் தொல்காப்பியம் வலியுறுத்துகின்றது. காட்டாக, ஞாலம், ஞாயிறு, உலகம் என்னும் சொற்களைக் காண்போம். ஞாலம் என்றால் அசைதல் என்றும், ஞாயிறு என்றால் பொருந்தியிருப்பது என்றும்,…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம் – தொடர்ச்சி) பூங்கொடி இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை கோமகன் வஞ்சினம்           கலங்கிய கோமகன் கனலும் நெஞ்சினன் இலங்கிழை நல்லாள் எழில்விழிப் பூங்கொடி சொல்லிய மாற்றம் சுடுநெருப் பாகிக் கொல்லுவ தென்னக் கொடுந்துயர்ப் படுத்தப்                    பொறாஅ மனத்தினன், புந்தி மயங்கி     5           மறாஅ மனத்தொடு மணங்கொள இயைவள் எனாஅ நினைந்தேன் எற்பழித் தொதுக்கினள்; தருக்கிய பூங்கொடி செருக்கினை யடக்கி வருத்துமவ் வொருத்தியை வாழ்க்கைத் துணையெனக்             கொள்ளா தொழியேன்…

வெருளி நோய்கள் 96 – 100 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 91-95 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 96 -100 96.) 58 ஆம் எண் வெருளி – Pentekontoctophobia58 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 58 ஆம் எண் வெருளி.pentekonta என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 50 என்றும் octo என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 8 என்றும் பொருள். Pentekontoctophobia – fear of 58 (branch of numerophobia) = 58 குறித்த வெருளி. எண் வெருளி வகைப்பாட்டைச் சேர்ந்தது.58 ஆம் எண்ணிற்குரிய சொல், வளமின்மை என்னும் பொருள் தரும் மற்றொரு…

வெருளி நோய்கள் 66-70 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 61-65 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 66-70 66.) 14 ஆம் எண் வெருளி – Quattuordecimphobia14 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 14 ஆம் எண் வெருளி. 00 67.) 15 ஆம் எண் வெருளி Quindecimphobia15 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 15 ஆம் எண் வெருளி.00 68.) 16 ஆம் எண் வெருளி – Hekkaidekaphobia16 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 16 ஆம் எண் வெருளி.00 69.) 17 ஆம் எண் வெருளி…

நீயா நானாவின் தொடர்ச்சியான தனி நேருரை – இலக்குவனார் திருவள்ளுவன்

நீயா நானா முகங்கள் தமிழில் வடமொழிக் கலந்ததால் சேர நாட்டை நாமே இழந்து விட்டோம் இலக்குவனார் திருவள்ளுவனிடம் அசுவின் நேர்காணல்