கனடா இலக்கியத்தோட்டம் சார்பில் இளங்குமரனார்க்கு விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள்
வைகாசி 06, 2048 / 20/5/17 அன்று மதுரைத்தமிழ்ச்சங்கத்தில் இளங்குமரனார்க்குக் கனடா இலக்கியத்தோட்டம் சார்பில் பேராசிரியர் செல்வகுமார் விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள் (பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக!) முனைவர் மறைமலை இலக்குவனார் உரையின் ஒரு பகுதி: https://www.youtube.com/watch?v=chnuQZ40dpA&feature=youtu.be
ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்!
ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்! மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராமேசுவரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது. போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனச்சான்றுள்ள எவராலும்…
உலகலாவிய சிறுகதைப் போட்டி
பேரன்புடையீர், வணக்கம். மலேசியா நாட்டில் உலகலாவிய சிறுகதைப் போட்டி! தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017 மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். இவ் உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை…
பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு, மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா
பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு ஆகத்து 2017 மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா அன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல தமிழ் அமைப்புகளோடு இணைந்து, வாசிங்டன் வட்டாரத்தில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாடு, இந்த ஆண்டு ஆகத்து மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை ஒட்டி, குறுந்தொகை சார்ந்த கட்டுரைகள் அடங்கிய மலர் ஒன்று வெளியிடப்படும். இம் மலரில் வெளியிடுவதற்கு, தமிழறிஞர்களிடமிருந்து குறுந்தொகை பற்றிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தங்கள் கட்டுரைகளை ஆனி 16 / சூன் 30, 2017 நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகளுக்கான விதிமுறைகள்; அனுப்பப்படும் படைப்பானது, ‘குறுந்தொகை’ சார்ந்தோ குறுந்தொகையில் இடம்…
ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம்…
தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் -சென்னைக் கடற்கரை
தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்தும் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான சென்னைக் கடற்கரையில்(‘மெரீனாவில்’) கண்ணகி சிலை பின்புறம் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி 07 / மே 21 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழீழ இனப்படுகொலையை நாம் மறந்து…
விட்டர் இராசலிங்கம் புத்தக வெளியீட்டுப் படங்கள்
புத்தக வெளியீட்டு விழா புத்தகத்தின் பெயர் : ‘ History of the dispossessed Sri lankan Tamils’” ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) [பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக.]
சுவிட்சர்லாந்திற்கு இலக்கியச் சுற்றுலா
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017
வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017 கருத்துகள் வலைப்பூவில் அழைப்பிதழைக் காண்க! http://thiru2050.blogspot.in/2017/05/2017.html
இன அழிப்பில் நீதி கோரிப் போராடுவோம்! – இலண்டன்
ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்! நீதி கோரிப் போராடுவோம்! வைகாசி 04, 2048 / 18-05-2017, வியாழக்கிழமை மாலை 5மணி நிலக்கீழ் தொடருந்து நிலையம்:, இலண்டன் [Hyde Park, London W2 2UH, Marble Arch] தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று எமக்குள்ளே நிறையவே கதைத்தாகி விட்டது. போர் முடிந்து 8 வருடங்கள் ஆகியும் மிலேச்சத்தனமான போரின் காயங்கள் ஆறவில்லை. வீர சுதந்திரம் கோரிய எம் தமிழினம் இன்று தம் நிலத்தை விட்டு உலகெங்கும் துரத்தியடிக்கப்பட்டுள்ளது. நம் கடல், நிலம், வீடு,…
மே நாள் – கோவைக்கோதை
மே நாள் – கோவைக்கோதை உழைப்பின் ஊதியம் இளைத்தது. உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர். களைப்பில் மனிதர் வளைந்தனர். சளைக்கவில்லை பலர் விழித்தனர். நுழைந்தது கேள்விகள் – கொதித்தனர். விளைந்தது போராட்டம் – குதித்தனர். சிக்காகோ நியூயோர்க்கு பாசுடனீறாக அக்கிரமம் அழிக்கத் திரண்டனர். நோக்கம் நிறைவேறப் போராட்டம், சிறை. உக்கிரமானது பன்னாட்டுப் புரட்சி. உழைக்கும் நேரம் எட்டுமணியாக உரிமையைப் போராடி வென்றனர். தொகுதியாய்க் கூட்டங்கள் உரிமைபேச தொழிலாளர் நாளானது மே ஒன்று. எப்போதும் பணத்தில் குறியானவர்கள், தப்பாக மக்களை ஏமாற்றுபவர்கள், எப்போது தானாகத் திருந்துவார்கள், அப்போதன்றோ…
18 ஆவது சைவ மாநாடு, இலண்டன்
சித்திரை 23 & 24, 2048 / மே 06 & 7 மே07, 2017 18 ஆவது சைவ மாநாடு, இலண்டன் பிரிதானிய சைவக்கோயில்கள் ஒன்றியம்
