இளைஞர் கைகளில் இணையத்தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்
இளைஞர் கைகளில் இணையத்தமிழ் தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அனைவரும் எதிரொலிக்கும் கவலை முதியோர் அவையாக இருக்கிறதே என்பதுதான். எந்தத் தமிழ்க்கூட்டம் என்றாலும், இளைஞர்களைக் காண முடிவதில்லை. ஒருவேளை உரையாளர்களின் குடும்பத்தினர் யாரும் வந்திருந்தாலும் அவர்கள் ஒருவர் அல்லது இருவராகத்தான் இருப்பர். கூட்டம் இறுதிவரை இருப்பார்கள் என்பதும் ஐயமே. இதற்காகவே நான் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினேன். அங்கும் தமிழ் பயிலும் ஏதோ ஓர் ஆண்டின் மாணாக்கர்கள் மட்டும் அமர்ந்திருப்பார்கள். வருபவர்கள் ஆர்வமாகத்தான் இருப்பர். ஆனால், கல்லூரியில் இந்த நிகழ்ச்சிக்கு இத்தனாம் ஆண்டு…
கல்வி கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்) – பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் வகுப்பு)
கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்) முன்னுரை நம் நாடான மலேசியா, கல்வித்துறையில் அறைகூவல்களை எதிர்கொள்ள நாட்டின் கல்வித்துறையில் புது உத்தி(வியூகங்)களை மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின் உயிர்நாடி 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் அணுகுமுறையாகும். இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாணவனும் தொழில் நுட்பக் கற்றலில் பீடு நடை போடுவது இன்றியமையாததாகும்.. ஆகவே இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சிநிலையில் தமிழ்ப்பள்ளியும் அடங்கும் என்பது காலத்தின் விதியாகும். கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பக் கூறுகள் பள்ளி ஒளிபரப்பு…
வெள்ளிசை(Karoeke) முறையில் தமிழ் இலக்கணம் கற்றல் கற்பித்தல் – புவனேசுவரி கணேசன்
வெள்ளிசை (Karoeke) தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தித் தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தல் ஆய்வுச் சுருக்கம் இந்த ஆய்வானது, தொடக்கக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் தமிழ்மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலுக்கு உதவி புரியும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக மொழிப் பாடத்தில் இடம்பெறும் இலக்கணம் எனப்படுவது மனனம், புரிதல், எடுத்துக்காட்டு என்ற மூன்று கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைச் சென்றடைய வேண்டும். இக்கூறுகளை ஒருங்கிணைத்துக் கற்பிக்கப்படும் இலக்கண விதிகளே மாணவர்களின் சிந்தையில் பதியும் என்பதே என் கருத்து. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தல் முறையோடு இதனை…
ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3 இங்கு நாம் குறித்துள்ள நோக்கு முதலானசொற்கள் வேறு என்னென்ன பொருட்களை உணர்த்தப் பயன்படுகின்றன என்று காணுதல் வேண்டும். இவ்வாறு காணும்பொழுது நாம் காணும் சொற்கள் தொடர்பாக வேறு சொல்லாக்கம் இருப்பின் அவற்றையும் கண்டறிய வேண்டும். இஃது ஒரு சங்கிலித்தொடர்போல் அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக 90 ஆவது பக்கத்தில் ஆய்வு என்ற பொருளை, aspect, attention, inspection, reference, vision, sight முதலான சொற்கள் குறிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்….
இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இன்றைய தேவை குறுஞ்சொற்களே! – 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3 தெரிபொருளும் புரி பொருளும் சொல் இடத்திற்கு ஏற்பப் பொருளைப் பெறுகின்றது என்பதை மறந்து நாம் ஏற்கெனவே அறிந்த பொருளையே பொருத்திப் பார்க்கும்பொழுது சொல்லாக்கம் தவறாய் அமைகிறது. இத்தவறு நேரக்கூடாது என விழிப்புடன் இருக்கையில் சொல் விளக்கமாய் அமைந்து விடுகிறது. அதையே மற்றொரு வகையாகவும் கூறலாம். ஒவ்வொரு சொல்லும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் பொருள் ஒன்று உண்டு. அதே சொல் உணர்த்திப் புரிய வைக்கும் பொருள் பல உண்டு….
ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 Department – துறை என்கிறோம். அரசு பல்வேறு துறைகளாகச் செயல்படுகின்றது. இவற்றை மேலாண்மைப்படுத்தும் செயலகத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு தேவை. ஏனெனில், செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் தன்னுள் பல துறைகளை அடக்கியது. எடுத்துக்காட்டாகச் செயலகத்தில் உள்ள உள்துறையில் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை போன்ற பல துறைகள் அடங்கும். ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழிலும் இரண்டிற்கும் துறை என்ற ஒரே சொல்லையே பயன்படுத்துவது குழப்பத்தைத்தான் தருகின்றது. இரண்டிற்கும்…
இன்றைய தேவை குறுஞ்சொற்களே! . இலக்குவனார் திருவள்ளுவன்
இன்றைய தேவை குறுஞ்சொற்களே! ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக்’ கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு பான்மை கூட்டுச்சொற்களாக அமைகின்றன. சொலலாக்கம் கூடியவரை தனிச்சொற்களாக அமைக்கப்பட வேண்டும். இவையும் மூன்று அல்லது நான்கு எழுத்துகளுக்கு உட்பட்டக் குறுஞ்சொற்களாய் இருத்தல் வேண்டும். நெடுஞ்சொல் அஞ்சி அயல்மொழியிலுள்ள குறுஞ்சொல்லையே எடுத்தாளக் கூடாது என வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். எளிமையும் வழமையும் அயற்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை உருவாக்குகையில் பெரும்பாலானவை பொருள் விளக்கமாக அமைகின்றன. இதனால் வினைவடிவம், பெயர் வடிவம் போன்று வெவ்வேறு சொல்வடிவங்களில் இதுபோன்ற சொற்களைக் கையாளுகையில்…
ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 ஒரே பொருளைச் சுட்டும் பல்வேறு சொற்களும் பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரே சொல்லும் உள்ள நிலைமை அனைத்து மொழிகளிலும் காணப்பெறும் இயல்புதான். இந்நிலைமையைத் தமிழிலும் மிகுதியாய்க்; காண்கிறோம். இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருளை உணரும் நிலை வெளிப்படையாய் இருப்பின் குறையொன்றும் இல்லைதான். ஆனால், அதே நேரத்தில் பொருளை உணரும் இடர்ப்பாடு இருப்பின் சொற்களஞ்சியத்தை வளப்படுத்த வேண்டியது இன்றியமையாதது அல்லவா? ஒரு சொல்-பல்பொருள் என்ற நிலைமை கலைச்சொற்களைப் பொருத்தவரை தவிர்க்கப்பட்டாக வேண்டும். கலைச்சொற்கள் குழப்பமின்றித்…
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா : இணையவழி உரையாடல் காணுரைகள்
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா இணையவழி உரையாடல் காணுரைகள் மலேசியாவின் இரண்டாம் பெரிய நகராமான பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உலகத்தமிழிணையமாநாடு ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இது குறித்துச் சென்னையில் ஆடி 21, 2048 ஞாயிறு ஆக.06, 2017 அன்று மாலை நடைபெற்ற இணைய வழிஉரையாடல் பதிவுகள். உரையாளர் மரு.மணவை மு.செம்மல் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/ https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/ நெறியாளர் இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488290941236990/ https://www.facebook.com/DrSemmal/videos/1488290941236990/…
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல்
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல் நாள் : ஆடி 21, 2048 ஞாயிறு ஆக.06, 2017 மாலை 6.00 – 7.30 இடம் : வெள்ளை மாளிகை, மணவை முசுதபா நினைவகம் ஏஈ 103. 6 ஆவது தெரு, பத்தாவது முதன்மைச்சாலை, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600 040 நேரலை/ உரையாடலில் பங்கேற்க இணைய முகவரி : https://www.fb.com/DrSemmal பதிவான காணொளிகளைக் காண : https://www.youtube.com/user/naalayatamil இணைய உரையாடலில் பங்கேற்க அழைக்கிறோம்! http://www.wtic.my/
விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி
விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி [படங்களை அழுத்தின் சற்றுப்பெரிய அளவில் காணலாம்.]
சங்க இலக்கியம் பாடப்பட்ட காலமும் தொகுக்கப்பட்ட காலமும் வெவ்வேறு! – பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்
சங்க இலக்கியம் பாடப்பட்ட காலமும் தொகுக்கப்பட்ட காலமும் வெவ்வேறு! – பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்
