காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நடைபெறும் தொடர்போராட்டங்களில் அணிதிரள்க!
நிலமீட்டெடுப்பு – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகத் திங்களன்று நடைபெறும் தொடர்போராட்டங்களில் உணர்வுடன் பெருந்தொகையில் அணிதிரள்க! தமிழீழத் தாயகத்தில் சிறிலங்காப் படையினரால் பறிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்வதற்காகவும் எமது மக்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு கவனயீர்ப்பு போராட்டங்களில் மக்களை அணிதிரள தலைமையர் வி. உருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை வைகாசி 29, 2048…
சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் : கடந்த 50 ஆண்டுகள் சுவடுகளைத் தேடி – ஆங்கில உரை
வைகாசி 25, 2048 / சூன் 08, 2017 வியாழன் இரவு 7.30-9.00 சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் : கடந்த 50 ஆண்டுகள் சுவடுகளைத் தேடி – ஆங்கில உரை உரையாளர் : மாலன் நாராயணன் பாசுகர் கலைக்கழகம், தெரிவு மையம், சிங்கப்பூர் 180231 தமிழ் இலக்கியம் பற்றிய ஆங்கில உரை. வாய்ப்புள்ளவர்கள் வருக! அருண் மகிழ்நன்
தமிழர்களின் சிக்கல்களை அறியாதவர் வடக்கு ஆளுநர்!
தமிழர்களின் சிக்கல்களை அறியாதவர் வடக்கு ஆளுநர்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு! வடக்குமாகாண ஆளுநர் தமிழ் மொழியைப் பேச மட்டும் தெரிந்து கொண்டுள்ளாரே தவிர, தமிழர்களின் சிக்கல்கள் தொடர்பான உண்மைகளைத் தெரிந்து கொள்ளாதவராக இருக்கிறார். இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் இணைப்பாளர் இலீலாதேவி ஆனந்த நடராசா குற்றம்சாட்டினார். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த பிப்பிரவரி மாதம் 20ஆம் நாள் முதல் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை 100…
கனடா இலக்கியத்தோட்டம் சார்பில் இளங்குமரனார்க்கு விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள்
வைகாசி 06, 2048 / 20/5/17 அன்று மதுரைத்தமிழ்ச்சங்கத்தில் இளங்குமரனார்க்குக் கனடா இலக்கியத்தோட்டம் சார்பில் பேராசிரியர் செல்வகுமார் விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள் (பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக!) முனைவர் மறைமலை இலக்குவனார் உரையின் ஒரு பகுதி: https://www.youtube.com/watch?v=chnuQZ40dpA&feature=youtu.be
ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்!
ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்! மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராமேசுவரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது. போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனச்சான்றுள்ள எவராலும்…
உலகலாவிய சிறுகதைப் போட்டி
பேரன்புடையீர், வணக்கம். மலேசியா நாட்டில் உலகலாவிய சிறுகதைப் போட்டி! தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017 மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். இவ் உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை…
பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு, மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா
பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு ஆகத்து 2017 மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா அன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல தமிழ் அமைப்புகளோடு இணைந்து, வாசிங்டன் வட்டாரத்தில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாடு, இந்த ஆண்டு ஆகத்து மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை ஒட்டி, குறுந்தொகை சார்ந்த கட்டுரைகள் அடங்கிய மலர் ஒன்று வெளியிடப்படும். இம் மலரில் வெளியிடுவதற்கு, தமிழறிஞர்களிடமிருந்து குறுந்தொகை பற்றிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தங்கள் கட்டுரைகளை ஆனி 16 / சூன் 30, 2017 நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகளுக்கான விதிமுறைகள்; அனுப்பப்படும் படைப்பானது, ‘குறுந்தொகை’ சார்ந்தோ குறுந்தொகையில் இடம்…
ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம்…
தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் -சென்னைக் கடற்கரை
தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்தும் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான சென்னைக் கடற்கரையில்(‘மெரீனாவில்’) கண்ணகி சிலை பின்புறம் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி 07 / மே 21 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழீழ இனப்படுகொலையை நாம் மறந்து…
விட்டர் இராசலிங்கம் புத்தக வெளியீட்டுப் படங்கள்
புத்தக வெளியீட்டு விழா புத்தகத்தின் பெயர் : ‘ History of the dispossessed Sri lankan Tamils’” ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) [பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக.]
சுவிட்சர்லாந்திற்கு இலக்கியச் சுற்றுலா
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017
வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017 கருத்துகள் வலைப்பூவில் அழைப்பிதழைக் காண்க! http://thiru2050.blogspot.in/2017/05/2017.html
