16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு
16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு சிறந்த கட்டுரைகள் படைக்கும் மாணவர்களுக்கோ இளம் ஆய்வாளர்களுக்கோ பயணப்படியாக கனடிய வெள்ளி 500 என நால்வருக்கு சிறப்பு உதவித்தொகைகள் வழங்கப்படும். ஆய்வரங்கக் குழுவின் முடிவே இறுதியானது. இது தவிர சிறந்த கட்டுரைகளுக்கெனப் பல பரிசுகள் உள்ளன
16 ஆவது உலகத்தமிழிணைய மாநாடு – முழக்கம், இலச்சினைக்கானபோட்டிகள்
அன்புடையீர், வணக்கம். 16-ஆவது உலகத் தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மிகு தொராண்டோ மாநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது. இவ்வாண்டு கனடாவின் 150 ஆண்டுநிறைவும் ஆகும். மாநாட்டின் கருத்து முழக்கங்கள் அல்லது உள்ளுறைத் தலைப்புகள் ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)என்பதும் தமிழில் தரவு அறிவியல் (Data Science)என்பதும் ஆகும். தமிழ்க்கணிமை ஆய்வுலகில் இயற்கைமொழியியல் ஆய்வுகள் பெருகிவருகின்றன. ஒளிவருடி எழுத்துணரி நுட்பம், எழுத்துரையிலிருந்து ஒலிவடிவப் பேச்சுரையாக்குவது, திராவிடமொழிகளுக்கிடையே இயந்திர மொழிபெயர்த்தல், மொழியியல் நோக்கில்…
தமிழ்ப்பட நிலையம்(thamizhstudio) – பாலுமகேந்திரா குறும்பட விருது 2017
தமிழ்ப்பட நிலையம்(thamizhstudio) – பாலுமகேந்திரா குறும்பட விருது 2017 இயக்குநர் பாலுமகேந்திரா நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த நாளான மே 19 அன்று, பாலுமகேந்திரா பெயரில் தமிழ்ப்பட நிலையம் குறும்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகிறது; நான்காம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறவிருக்கிறது. விருதுத் தொகை: உரூபாய் 25000/- தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். கலந்துகொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே…
மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது! – தாலின்
பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்: மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது! தாலின் அறிக்கை “தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கும் அவசரத்தில் மாநிலங்களின் உரிமைகளைப்பறிப்பதையும், மாநிலங்களிலுள்ள ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை’ செயலிழக்க வைப்பதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று தி.மு.க.ச் செயல் தலைவர் மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தளபதி மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ‘தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு’ அரசியல் சட்டத் தகுதி அளிக்கும் 123 ஆவது அரசியல் சட்டத்…
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக “உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்னூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக)ப் பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அஃதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து தாலர் பெறுமதியான வெகுமதி இதழ்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும்…
இலக்கிய ஆளுமைகளுடன் ஞாயிறுதோறும் சந்திப்பு, சென்னை
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இலக்கிய ஆளுமைகளுடன் ஞாயிறுதோறும் சந்திப்பு போட்டித் தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கென இ.ஆப., இ.கா.ப., இ.வ.ப., (இந்திய வனப்பணி) முதலான அனைத்து இந்தியப் பணிகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், துறை வல்லுநர்களுடன் சந்திப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கோடைக் கொண்டாட்டம், சென்னை
குழந்தைகளுக்கான கோடைக் கால முகாம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள், குழந்தைகள் நலனுக்காகப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ‘கோடைக் கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான கதை சொல்லி, இசை, ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்தல், அறிவியல் செயல்திறன், பொம்மலாட்டம், ஓகம்(யோகா), ஞாபகத்திறன் பயிற்சி, சதுரங்கம், வினாடி வினா, புத்தகங்களைப் பற்றிய அறிமுகம், படக்கதை எழுதும் பயிற்சி, காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும் பங்குனி 19, 2048 / 01.04.2017 முதல் வைகாசி 17, 2048 / 31.05.2017 வரை…
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமைதோறும் பொன்மாலைப் பொழுது
பொன்மாலைப் பொழுது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘பொன்மாலைப் பொழுது’ என்ற தலைப்பில் புகழ்மிகு இலக்கிய ஆளுமைகளுடன் சந்திப்பு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது. ஏப்பிரல் மாதத்தில் கீழ் வருமாறு ஆளுமைகளுடன் சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனி 19,2048 / 01.04.2017 : திரு நெல்லை செயந்தா பங்குனி 26, 2048/08.04.2017 : திரு சு.வெங்கடேசன் சித்திரை 02, 2948/ 15.04.2017 : திரு எசு.இராமகிருட்டிணன் சித்திரை 09, 2948/ 22.04.2017 :…
காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்!
காவல்துறைப் பணிச்சேர்க்கை 2017 காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்! காவல்துறையில் சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்புவோர் காவல்துறையில் உள்ள புதிய காலிப் பணியிடங்களைப் பற்றிய முழுமையான பட்டியலை இங்கு காணலாம். இந்திய அரசுப் பணிகள் வலைப்பூ காவல்துறையிலுள்ள எல்லாக் காலிப் பணியிடங்களையும் பற்றிய முழுப் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தத் தகவலை ’அகரமுதல’ இதோ உங்களுக்கெனத் தமிழில் வழங்குகிறது. துறை மொத்தப் பணியிடங்கள் பணி நிலை கடைசி நாள் முழு விவரம் சார்க்கண்டு காவல்துறை 1500 உதவிக்…
ஐ.நாவே நாங்கள் நாதி அற்ற இனமா? வவுனியாவில் கவனவீர்ப்புப் போராட்டம் – விழலுக்கிறைத்த நீராயிற்றே !
ஐ.நாவே நாங்கள் நாதி அற்ற இனமா? எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா? வவுனியாவில் கவனவீர்ப்புப் போராட்டம் விழலுக்கிறைத்த நீராயிற்றே! தற்போது ஒரு ‘மறுசுழல் தீர்மானத்தின்’ வாயிலாக, சிறீலங்காவுக்கு மேலும் ஈராண்டுக்கால நீட்டிப்புத்தர முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக்கூறாகிய, உசாவல்களில் அயல்நாட்டு நீதிபதிகளைச் சேர்த்துக்கொள்வது என்பதை ஏற்கெனவே சிறீலங்காவின் அதிபரும் -தலைமையரும்( பிரதமரும்) பகிரங்கமாக மறுத்துள்ளார்கள். அரசாங்கமே ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக்கூறினை நிராகரிக்கிறது என்றால், அதே அரசாங்கம் இந்த ‘மறுசுழல் தீர்மானத்தைச் செயலாக்கும்’ என்று ஐநா மனித உரிமை மன்றம்…
மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். – சீமான்
மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். ச.நே.ப. மாணவர் முத்துக்கிருட்டிணன் மரணத்திற்கு உரிய நீதி உசாவல் வேண்டும். – சீமான் வலியுறுத்தல் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ‘தற்போதைய வரலாறு’ பாடத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த சேலம் மாணவர் முத்துக்கிருட்டிணன் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையினையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத் துயரத்தில் நாம் தமிழர் கட்சி…
உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா
அன்புடையீர், உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மணக்கும் தொராண்டோ பெருநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது. உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்றார்கள். தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைலப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கருத்தரங்க முழக்கங்கள்: ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning) தமிழில் தரவு அறிவியல் (Data Science) நினைவில் கொள்க: 2 பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி நாள்: சித்திரை…
