தாவணி நாள் கொண்டாடுக! – சகாயம் வேண்டுகோள்

 கூட்டாலை(கோவாப்டெக்சு) நிறுவனம் உலக மகளிர் நாளான மார்ச்சு 8 அன்று  தாவணிநாள் கொண்டாட முடிவெடுத்துள்ளது. கடந்த திங்கள் வேட்டி நாள் கொண்டாடியதுபோல், மார்ச்சு 8 வரையிலான ஒரு நாள் தாவணி நாள் கொண்டாடும்படி அதன் மேலாண் இயக்குநர் சகாயம் இ.ஆ.ப. வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கேற்ப கூட்டாலை விற்பனை நிலையங்களில், பல வண்ணங்களில், தாவணிகள் விற்பனைக்கு  வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். வேட்டிநாளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததுபோல், கல்லூரி மாணாக்கியரிடமும் பல்கலைக்கழக மாணாக்கியரிடமும் தாவணி நாளுக்குப் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தூக்குத் தண்டனை நீக்கம்; உலகெங்கும் நீதியின் ஒளி: வைகோ

  இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிமான்கள் சதாசிவம், இரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்தி(சிங்) ஆகிய மூவர் அமர்வு, 15 பேர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை  நீக்கி,  வாணாள் தண்டனையாக அறிவித்து இருக்கின்ற தீர்ப்பு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோருக்கு, 2004 இல், உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. குடியரசுத் தலைவருக்கு…