காவிரித் தாய் காப்பு முற்றுகை, தஞ்சாவூர்

காவிரித் தாய் காப்பு முற்றுகை இடம் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வல்லம் சாலை) காலம் : தி.பி.2048 பங்குனி-15,  28.03.2017 செவ்வாய் காலை 10 மணி முதல் தமிழ்நாடு அரசே செயல்படு; இந்திய அரசைச் செயல்பட வை!   இந்திய அரசே! காவிரித்தீரப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை நீக்காதே! காவரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்திற்குக் காவிரி வழக்கை அனுப்பாதே! விளைநிலங்களில் எங்கேயும் எரிநெய்மம்(பெட்ரோலியம்), எரிவளி, நிலக்கரி எதுவும் எடுக்காதே! தமிழ்நாடு அரசே! மேற்கண்டகோரிக்கைகளைச் செயல்படுத்த இந்திய அரசை வலியுறுத்து; அரசியல் அழுத்தம் கொடு! காவிரிச்சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவித்திடு! ஆறுகளைக்காலி செய்யும் மணல் விற்பனையை முற்றாக நிறுத்து! கட்டுமானப் பணிகளுக்கான மணல் எடுப்பது குறித்து, பரிந்துரை வழங்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திடு! உச்சவரம்பின்றி அனைத்து உழவர்களின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்!     தண்ணீரின்றிப் பயிர்அழிந்த நிலங்களுக்கு காணிக்கு(ஏக்கருக்கு) உரூ. 25,000  உதவித்தொகை  வழங்கு!  இதில் 5 காணிக்கு(ஏக்கருக்கு) மட்டும் என்ற வரம்பை நீக்கு!      தண்ணீரின்றிப் பயிர் செய்யாமல் தரிசாகப் போடப்பட்ட நிலங்களுக்கு காணிக்கு(ஏக்கருக்கு) உரூ.15,000 உதவித்தொகை வழங்கு! உழவுத்தொழிலாளர்குடும்பம் ஒன்றுக்கு ரூ.25,000 துயர் துடைப்பு நிதி வழங்கு! தண்ணீரின்றிப் பயிர் அழிந்ததைக் கண்டு பதைத்து நஞ்சருந்தியும், மாரடைப்பு ஏற்பட்டும் இறந்த உழவர் குடும்பத்திற்கு உரூ.15,00,000இழப்பீடு வழங்கு! காவிரித் தாய் காப்பு முற்றுகை மேற்கண்ட கோரிக்கைகளுக்காகக், கட்சி சார்பின்றிக் காவிரி உரிமை மீட்புக் குழு, 28.03.2017 முதல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் தொடர் முற்றுகைப்    போராட்டம் நடத்துகிறது. அனைவரும் வாருங்கள்! செய்தித் தொடர்பகம், காவிரி உரிமை மீட்புக் குழு இணையம்:www.kaveriurimai.com பேசி: 94432 74002, 76670 77075 

இலக்குவனார் இலக்கியப்பேரவையின் விழா, அம்பத்தூர்

மாசி 13, 2048 / ஞாயிறு / மார்ச்சு 26, 2047 மாலை 5.30 தமிழ்நடைப்பேரவையின் பதின்ம ஆண்டுவிழா பண்டாரகர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நிறைவு விழா விருது வழங்கும் விழா தொல்காப்பியர் விருது : முனைவர் இரா.மதிவாணன் திருவள்ளுவர் விருது:     முனைவர் விவேகானந்த கோபால் இலக்குவனார் விருது:     மரு.தி.பழனிச்சாமி விருது வழங்குநர்:            முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் சிறப்புரை :                          முனைவர் சுப.வீ. பண்டாரகர் வ.சுப.மாணிக்கனாரின் தன்னேரிலாத் தமிழ்த் தொண்டு வெளியிடப்பெறும் நூல்கள்: 1. தமிழ்நடைப்பேரவையின்பதின்ம…

இலக்கியச் சிந்தனையின் 564 ஆவது நிகழ்வு

பங்குனி 12, 2048  சனிக்கிழமை  25-03-2017  மாலை 6.00  இலக்கியச் சிந்தனையின் 564 ஆவது நிகழ்வு ” நானும் கண்ணதாசனும் “ உரை : திரு அமுதன்  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 24 ஆவது நிகழ்வு “இளைஞர் விரும்பும் இலக்கியம்” –    சரசுவதி   சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation)                          அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018      அனைரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in

உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா

அன்புடையீர்,   உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மணக்கும் தொராண்டோ பெருநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது.  உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்றார்கள்.   தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைலப்புகளிலும்  ஆய்வுக்  கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.   கருத்தரங்க முழக்கங்கள்: ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும்  (Deep Learning) தமிழில் தரவு அறிவியல் (Data Science)     நினைவில் கொள்க: 2 பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி  நாள்: சித்திரை…

சங்கர் நினைவேந்தல், பொள்ளாச்சி

அன்பிற்குரியீர்!        வணக்கம். மார்ச் 13 சங்கர் உடுமலையில் படுகொலை செய்யப்பட்ட நாள். ஓராண்டு முடிகிறது. சங்கருக்கான நினைவேந்தல் இன்று ( மாசி 06, 2048 / 19.03.2017) ஞாயிறு மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி நகரத்தார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. “சாதிய மதிப்பு(கவுரவ)க் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக!“ எனும் கோரிக்கைக்கு வலுச் சேர்த்திட நிகழ்வுக்கு அன்புரிமையுடன் அழைக்கிறேன்.   வே.பாரதி          பொதுச் செயலாளர்  தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்          …

புலம்பெயர்தமிழர் தகுதிநிலைப்பாடு குறித்த கலந்துரையாடல்

பங்குனி 05, 2048 / மார்ச்சு 18,. 2017 மாலை 4.00 – இரவு 7.00 அன்புடையீர் ! செயற்பாட்டின் உருவாக்கம்  கடந்த மார்கழி மாதம் ( 2016 ) தமிழ் தகவல் மையத்தினால் நடத்தப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுக்காகன கருத்தரங்கில் ‘அகதிகளும் புலம்பெயர்வும்’ என்ற அமர்வில் கலந்துரையாடப்பட்ட தரவுகளை உள்வாங்கி அதனை மேலும் செழுமைப்படுத்தி செயலில் முன்வைக்கும் ஒரு முயற்சியாக இக்கூட்டம் அமைகின்றது. இதை ஒரு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளும் ஆர்வமும், திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத் தொடரின் முதலாவது முயற்சியே இதுவாகும். https://www.youtube.com/shared?ci=YlFoAHYK3_4 https://www.youtube.com/shared?ci=ga_Myvx48Hw https://www.youtube.com/shared?ci=u-S4yZODNGA…

பன்னாட்டுக்கருத்தரங்கம், மார்ச்சு 2017, மதுரை

 பங்குனி 28, 2048 / 31.03.2017   தமிழ் உயராய்பு மையம், தியாகராசர் கல்லூரி,மதுரை  மாணிக்கவாசகர் பதிப்பகம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மதுரை – இலக்கியங்களில், ஆவணங்களில், வாழ்வியலில்!     ஒருங்கிணைப்பாளர்: முனைவர் இ.பேச்சிமுத்து, 7598132916  

கவிக்கோ ஞானச்செல்வன் நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை

பங்குனி 02, 2048 / மார்ச்சு 15, 2017 மாலை 6.00   கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய ‘அறிவோம் அன்னைமொழி’ ‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே’ நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை      

‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்வு, சென்னை

அன்புடையீர்,  வணக்கம். இலக்கியவீதியின்  – இந்த ஆண்டுக்கான தொடர் – ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘     பங்குனி 01, 2048 –  செவ்வாய் —  14.03.2017. மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்  நடைபெற இருக்கும்     ‘வில்லிசையால் செழிக்கும்  செம்மொழி‘ நிகழ்ச்சிக்கு    தலைமை : திரு சிவாலயம் மோகன்     தொடக்கவுரை  : கலைமாமணி சுப்பு ஆறுமுகம்   அன்னம் விருது பெறுபவர் : கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம்   சிறப்புரை : கலைச்சுடர்மணி பாரதி திருமகன் அவர்கள் …

மகளிர் நாள் விழா, திருச்சிராப்பள்ளி

 மாசி 28, 2048 / மார்ச்சு 12, 2017 மாலை 5.00 இளையோர் இந்தியக் கழகமும் நந்தவனம் நிறுவமும் நிகழ்த்தும் மகளிர் நாள் விழா, திருச்சிராப்பள்ளி

இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்  மாசி 27, 2048 / 11.03.2017 சனி காலை 9.00 மணி, சென்னைச் செய்தியாளர்கள் சங்கம், சேப்பாக்கம் ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை, போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதை நீங்கள் அறிவீர்கள். இனப்படுகொலை முடிந்து 8 ஆண்டுகள் ஆனபிறகும்,  பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்றங்களை   உசாவுவதாக இலங்கையே ஒப்புக்கொண்டு 18 மாதம் ஆனபிறகும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்காத  இலங்கை, …

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம், மதுரை

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம்   வணக்கம். கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வலியுறுத்தும் போராட்டம் மதுரை, சென்னையை மையப்படுத்தி நடந்து வருகிறது. வழக்கறிஞர்கள் போராட்டக் குழு தொடர் போராட்டங்களை நடத்திச் சென்னையில் கைதாகிச் சிறை சென்றதும், இடை நீக்கம் செய்யப்பட்டதும் நாம் அறிந்தனவே!   பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம் 2015இல் தொடங்கப்பட்டு மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் திரு வெள்ளையன்…