முத்திரை-இந்தியப்பல்மருத்துவக்குழு02ூ dental council02

இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில்
 

தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகள்

 

  புது தில்லியில் உள்ள இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் சுருக்கெழுத்தர் (stenographer), கணிணியாளர், கீழமைப் பிரிவு எழுத்தர் (lower division clerk) முதலான 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  பணி: சுருக்கெழுத்தர் (stenographer)03
ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.2,400/-
தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 80 சொற்கள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 சொற்கள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

  பணி: கணிணியாளர் (Computer operator) – 04
ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.2,400/-
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துருக்கள்(key depressions) தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பதோடு 3 ஆண்டுகள் பணிப் பட்டறிவு பெற்றிருக்க வேண்டும்.

  பணி: கீழமைப் பிரிவு எழுத்தர் (lower division clerk)05
ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.1,900/-
தகுதி: மேனிலை இறுதி வகுப்புத் (+2) தேர்ச்சியுடன் கணிணிப் பயன்பாட்டுப் (computer applications) பாடப் பிரிவில் 6 மாதப் பட்டயம் (Diploma) முடித்து ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 சொற்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஏவலர் (peon) – 05
ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.1,800/-
தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி.

அகவை (வயது) வரம்பு: அனைத்துப் பணிகளுக்கும் 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.dciindia.org.in/Admin/NewsArchives/Ad%20&%20Application%20Form.pdf என்கிற இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கித் தெளிவாகப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Secretary incharge,

Dental Council of India,

Aiwan-E-Galib Marg,

Kotla Road,

NEWDELHI- 110002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 13.03.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dciindia.org.in என்கிற இணையத்தளத்தைப் பாருங்கள்!

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan