சமூக ஆர்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு! – நாமக்கல் ஆட்சியர்
குமுக (சமூக) ஆர்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
நாமக்கல் மாவட்டக் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகஆர்வலர் பணியிடத்திற்கு வரும் பிப்பிரவரி 25-ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குழந்தைகள் தத்தெடுப்பு மாநில ஆதார மையத்தின் மூலம் தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் இல்லம் குறித்த நிலையை ஆய்வு செய்து அறிக்கை ஒப்படைக்கும் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்குக் சமூகச் சேவை, குமுகவியல் (சமூகவியல்), உளவியல், குழந்தை வளர்ச்சி, மனையியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று 25 அகவைக்கு மேல் 45 அகவைக்குள் உள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நாமக்கல் மாவட்டச் சமூக நல அலுவலகம், அறை எண் 19, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நாமக்கல் என்ற முகவரிக்கு இம்மாதம் 25-ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவு:
பயனுள்ள தகவல். நன்றி.
அன்புடன்
பெ.சந்திர போசு
சென்னை.