முத்திரை-தேசிய விண்வெளித்தொலையுணர்வு மையம் - Muthirai_NRSC

தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி

  ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் அளிக்கப்படவுள்ள தொழில்பயிலுநர் (apprentice) பயிற்சிக்குப் பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையம் (National Remote Sensing Centre)

இடம்: ஐதராபாத்து

பணி: ஓர் ஆண்டு பயிலுநர் பயிற்சி

காலியிடங்கள்: 42

தகுதி: பொறியியல் துறையில், தொடர்புடைய பிரிவில் 65 விழுக்காட்டு (percentage) மதிப்பெண்களுடன் பட்டயம் (Diploma) அல்லது இளநிலைப் பொறியியல் (B.E), இளநிலைத் தொழில்நுட்பப் (B.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nrsc.gov.in என்கிற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 06.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nrsc.gov.in என்கிற இணையத்தளத்தைப் பாருங்கள்.

அல்லது இங்கே அழுத்துக.

தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையம்

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan