(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன -தொடர்ச்சி)

இசைத்தமிழ் முழக்குக எங்கணும் பெரிதே! 120

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
கழியிருள் - மிகுந்த இருள், தேன்மொழி - பூங்கொடி.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வசைத்தொழில் புரிவோர் வாய்தனை அடக்குக!
இசைப்பணி புரிதல் இனிநமக் கேலாது
வசைத்தொழில் ஈதென வாளா விருந்தனை!
திசைத்திசைச் சென்று செந்தமிழ்ப் பாட்டின்
இசைத்திறன் காட்டுதி இனிநீ தாயே! 125
நின்னுயிர் பெரிதோ? தென்மொழி பெரிதோ?
இன்னுயிர் ஈந்தும் இசைத்தமிழ் பேணித்
தோமறு பணிசெயத் துணிந்தெழு நீ’என,

தருவிடை பெற்றுத் தனியே கினரே. 135