ramakrishna_vijayam_magazineattai02

சிரீஇராமகிருட்டிண மடத்தில் இருந்து வெளியாகும் சிரீஇராமகிருட்டிண விசயம் பத்திரிகை நூற்றாண்டை நோக்கி நடைபோடுகிறது. இதனை முன்னிட்டு, இந்த இதழ், சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.34,000 அறிவிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக அந்த இதழின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பகவான் சிரீஇராமகிருட்டிணர், அன்னை சிரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் எண்ணற்ற மகான்கள், உலகளாவிய மனிதநேய அருளாளர்களின் வரலாறுகள், அவர்களது அறிவுரைகள் மற்றும் நமது சாத்திரங்களின் அடிப்படையில் கரு உண்மை; உரு கற்பனை என்ற வடிவில் சிரீஇராமகிருட்டிண விசயத்தில் பல சிறுகதைகள் வெளியாகி வருகின்றன.

  இந்த வகையில் சேவை, தியாகம், பக்தி, மனிதநேயம், தேசபக்தி, சமுதாயப் பொறுப்பு, சமய நல்லிணக்கம் போன்றவற்றை விளக்கும் சிறுகதைகளைப் படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்கிறோம்.

  சிறந்த சிந்தனைகள் எவ்வாறு நடைமுறையில் செயல்வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் சிறுகதைகளை எழுதி அனுப்பிப் பரிசினைப் பெறுங்கள்.

  உங்களது சிறுகதைகளை அனுப்பும்போது

* சாத்திரங்களின்  கருத்துகளையோ, மகான்களின் நிகழ்வுகளையோ கூறும்போது ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள்.

* எல்லாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

* சிரீஇராமகிருட்டிண விசயத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் இருக்க வேண்டும்.

* கதைகளை அஞ்சலிலோ,  மின்அஞ்சலிலோ அனுப்பலாம்.

* இணையத்தளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே  வெளியிடப்பட்டவற்றை ஏற்க இயலாது.

* தேர்வாகாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.

* போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை முடிவு தெரியும்வரை வேறெந்தப் பத்திரிகைக்கும் அனுப்பப்படவில்லை என்ற உறுதிமொழி தேவை.

* பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

* முடிவு வெளியாகும் வரை கடிதம், தொலைபேசி, மின்அஞ்சல் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்.

முடிவுகள் செப்டம்பர் மாதத்து சிரீஇராமகிருட்டிண விசயத்தில் வெளியிடப்படும்.

 -ஆசிரியர்

கதைகளை அனுப்ப கடைசி நாள் : 25.7.2014

முதல் பரிசு உரூ.10,000/-

இரண்டாம் பரிசு உரூ. 8,000/-

மூன்றாம் பரிசு  உரூ. 6,000/-

5 ஊக்கப் பரிசுகள்  உரூ. 2,000/- வீதம் ரூ. 10,000/-

 அனுப்ப வேண்டிய முகவரி :

சிரீஇராமகிருட்டிண விசயம்,
31,சிரீஇராமகிருட்டிண மடம் சாலை,
மயிலாப்பூர்,
சென்னை – 600004.
மின்வரி :: sriramakrishnavijayam@gmail.com

தகவல்: முதுவை இதயத்து

ramakrishna_vijayam_announcement