india ondriyam

  பல ஊர்கள் இணைந்தால் ஊராட்சி ஒன்றியம். பல நாடுகள் இணைக்கப் பட்டதால் நாமிருக்கும் நாடு ஒரு நாடல்ல. ஒன்றியமாகும். அதனால்தான் அரசியல் சட்டம்  இந்திய ஒன்றியம் என்கிறது. இன்னும் தெளிவாக ‘ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா’ என்கிறது.

பலருக்கு இச்சொல் புதுமையாகத் தோன்றலாம். இசுலாமானவர்கள்கூட. ‘யூனியன் முசுலிம் லீக்’ என்று பெயரிட்டுள்ளனர். அதன் பொருள் அறிந்து பெயரிட்டுள்ளார்களா என்பது கேள்விக்குரியது.

  ‘யூனியன் கேபினட்’ என்கின்றனர். அதன் பொருள் ஒன்றிய அமைச்சரவை / ஒன்றிணைக்கப்பட்ட அமைச்சரவை என்பது.
‘யூனியன்கவர்ன்மெண்ட்’ என்ற சொல்லைக் கேட்டிருக்கலாம் அதன்  பொருள் ஒன்றிய அரசு.

  தமிழர்களே! இந்தியா என்பது ஒரு நாடல்ல!

பல்வேறு நாடுகளை இணைத்து வெள்ளைக்காரன் 1856இல் வைத்த பெயர் ‘இந்திய யூனியன்’  அதை நினைவூட்டும் விதமாக இசுலாமானவர்கள் ‘இந்திய யூனியன் முசிலீம் லீக்’ எனப் பெயர் வைத்துள்ளதன் பொருள் இந்தியாவின் எல்லா இசுலாமானவர்க்கான அமைப்பு என்பதாகும்.

  எனவே  ஊராட்சி ஒன்றியம் என எழுதுவது போல்  இந்திய ஒன்றியம் / ஒன்றிய இந்தியா  என. இனியேனும்  தமிழர்கள்மட்டுமேனும் எழுதவேண்டுகிறோம். ஏன் எனில் இந்தியா  என்பது வந்தேறிகளால் புதுபுதுப் பெயர்களால் விற்கப்படக்கூடியநாடு.

வந்தேறிகளுக்குத் தெரியும் இந்தியா என்பது ஒரு நாடல்ல ஒன்றியம்  ஒன்றிய இந்தியாவில் இருப்பவர்கள் இந்தியர்களல்ல என்பதும். பெரும் செல்வந்தர்களிடம் / வணிகர்களிடம் கத்தியின்றிக் குருதி சிந்தாமல் வந்தேறிகள் நம்மை விற்று விடுவர்.  அதன்  புதுப்பெயர்களில் ஒன்று சிறப்புப் பொருளாதார மண்டலம். அதற்காகக் கொண்டு வருவதுதான் நிலப்பறிப்புச் சட்டம். சிறப்புப் பொருளாதார  மண்டலத்தில் தொழிலாளர் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதாம். ஏன் என்றால் உழைப்பவர்கள் கேள்வி கேட்டு உயர்ந்து விடக்கூடாது  அதனால்தான் தொழிலாளர் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதாம். பெரும் போராட்டத்திற்குப்பிறகு கொண்டு வரப்பட்ட  தொழிலாளர் சட்டம் பின் பற்றப்படாது என்றால் நேர்மைக்கு – பொது மக்களுக்கு அங்கே  செல்ல வழியேது. ஏன் வழிகள் அடைக்கப்படுகின்றன என்றால்  விரும்பும்வகையில் விற்றுச்சுரண்டவே!  முன்னேற்றம் என்ற பெயரில் நம் முதுகெலும்பை உடைக்கவே!

ஒன்றிய இந்தியா  பாராளுமன்றக் கூட்டுக் கூட்டம் நடத்தி –  சட்டத்தை இயற்றுவது, அச்சட்டத்தால்  நம்மை ஒழிக்கவே! குறிப்பாகத் தமிழ்நாட்டை  – தமிழனை ஒழிக்கவே!

‘ஒன்றியஇந்தியா’ ஓயாது  மக்களுக்கெதிரான சட்டம் இயற்றத் துடிக்கிறது என்கிறோம். பல மாநிலம் ஒன்றிய இந்தியாவில் இருந்தாலும் மொழிவாரி மாநிலம் பிரிந்த பின் தமிழ்நாட்டை மட்டும்தான் வந்தேறிகள் ஆள்கின்றனர்.

பல கோடி தமிழர் இருந்தும் பலநாடுகளில் தமிழன்இருந்தும் நல் வழிகாட்ட உலகப் பொது மறை இருந்தும் தாய்மண்ணை ஆள ஒருவருக்கும் தகுதி இல்லையா?

நாம், தமிழர் என எழுவோம்! வெற்றிபெறுவோம்! ‘நாளை நமதே’ என்போம்!

உலகம் ஒருநாள் தமிழன் கைவரும்!

உலகம் உய்ய வாழ்வோம்!

thamizhthamizhan

– ஆ.சு மணியன், திருத்துறைப்பூண்டி
அலைபேசி 9976712362 /  பதிபேசி 9751160989