இயல், இசை, நாடகம் அறிவீர்!
உள்ளத்தால் பொருளியல்பை
உணர்த்தும் மொழி இயல் என்பர்
வெள்ளத்தால் எவ்வுயிரும் மகிழ்ந்திசைய
ஓசைகளும் விளங்க இன்பம்
கொள்ளச்செய் உரைத்தி றத்தாற்
குலவுமொழி இசையென்பர்; குறித்த செய்கை
விள்ளத்தால் அதுவாகப் பயிற்றுமொழி
நாடகமா விரிப்ப ராலோ
- வெள்ளை வாரணனார்: யாழ்நூல் சிறப்புப் பாயிரம்
வெள்ளை வாரணர் அவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் படத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன். நன்றி ஐயா!