நம் மொழியில் பாடினால்தான் கடவுளுக்கும் காது கேட்கும்! – இராசாசி

நம் மொழியில் பாடினால்தான் கடவுளுக்கும் காது கேட்கும்!   மனிதன் மொழிகளுடன் சேர்த்து இசையைக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சி உண்டாகிறது. மனிதக் குரல் சேர்ந்தவுடன் என்ன சொல்லுகிறார் என்று கூடவே மனம் கேட்கிறது. இசை மனத்தில் ஏறுவதுடன், என்ன சொல்லுகிறார் என்பதும் கூட ஏறுகிறது. இசையில் மொழிகள் வரும்போது அவை பொருளற்றதாய் வேறு ஏதோ ஒலியாய், முரசின் ஒலியாய், தம்பட்டையின் ஒலியாய் இருப்பதற்கு மாற்றாக, இசையின் சுவைக்கு இணைந்ததாக, நமக்கும் விளங்கும் மொழியாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். நம் மொழியில் பாடினால்தான் நம்…

புதுச்செருசியில் தமிழ்விழா 2016

ஆனி 17 – ஆனி 20, 2047 / சூலை 01 –  சூலை 04, 2016 பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆவது பிறந்தநாள் விழா தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா பேரவைத்தமிழ்விழா 2016 இயல், இசை, நாடகக் கலை நிகழ்ச்சிகள் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நியூசெர்சி தமிழ்ச்சங்கம்    

தமிழர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை, இசை, இசையே!

தமிழர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை, இசை, இசையே தமிழகத்தில் ஒரு குழந்தை பிறந்த நாள் தொட்டு அதாவது அது தன் முதலாவது உயிர்க்காற்றை இழுக்க ஆரம்பித்தது முதல் தொட்டு, இறுதி மூச்சு வரை தமிழ் இசை அதன் வாழ்க்கையோடு ஒன்றித்து நிற்கிறது. ஏன்? அது உயிர்நீத்த பின்னர்கூட அதன் தாயும் உறவினரும் இசைக்கும் ஒப்பாரிப் பாடல் அதன் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் எல்லாச் சடங்குளிலும் பிறப்புத்தொட்டு இறப்பு வரை வாழ்விலும் தாழ்விலும் இசையை இசைத்து…

இசை என்றால் என்ன? – இளங்கோவடிகள்

இசை என்றால் என்ன? யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையாகும் -இளங்கோவடிகள்: சிலப்பதிகாரம்: 3: 26-29  

இயல், இசை, நாடக விளக்கம் – க.வெள்ளைவாரணன்

இயல், இசை, நாடகம் அறிவீர்! உள்ளத்தால் பொருளியல்பை                 உணர்த்தும் மொழி இயல் என்பர் வெள்ளத்தால் எவ்வுயிரும் மகிழ்ந்திசைய                 ஓசைகளும் விளங்க இன்பம் கொள்ளச்செய் உரைத்தி றத்தாற்                 குலவுமொழி இசையென்பர்; குறித்த செய்கை விள்ளத்தால் அதுவாகப் பயிற்றுமொழி                 நாடகமா விரிப்ப ராலோ வெள்ளை வாரணனார்: யாழ்நூல் சிறப்புப் பாயிரம்

கலைகள்

  கலைமரபில் ‘ஆயகலைகள் அறுபத்து நான்கு’ என்னும் மரபு தோற்றம் பெற்றுள்ளது. காதர்பரி, பாகவத புராணம், விட்ணு புராணம், அரிவம்சம், இலலித விசுதாரம், காமசூத்திரம் முதலான நூல்கள் 64 கலைகளைப் பற்றிக் குறிக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றிற்கும் சிற்சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில நூல்கள் சிலவற்றைக் கூட்டியும் சிலவற்றை நீக்கியும் கொடுத்¬துள்ளன. ஆனால், 64 என்கின்ற எண்ணிக்கையை எல்லா நூல்களும் ஒரே நிலையாகப் பின்பற்றியுள்ளன. (கு.வெ.பாலசுப்பிரமணியன்: சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும்: பக்கம்.13) சிலம்பில் 64 என்கின்ற எண்ணிக்கை குறிப்பிட்டப்பட்டுள்ளது. (சிலப்பதிகாரம்: ஊர்சூழ்வரி: அடி. 116)…

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்துவேன் – வாசன்

திருவள்ளுவர்  நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் புகழ்பாடும் தமிழ் இசை நிகழ்ச்சி புதன்கிழமை (தை 2, 2045/ சனவரி 15.2014) நடந்தது. இதில் 133 தமிழ் இசைவாணர்க்ள பங்கேற்று, இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: “உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் புனித நூல்களான குர் ஆன் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். அதனால்தான் இனம்,  மொழிகளைத் தாண்டி உலகப் பொதுமறையாகத் திருக்குறள் விளங்குகிறது. அனைத்து நாட்டு…