ஓவியக்கலை – விபுலானந்த அடிகள்

ஓவியக்கலை ஓவு என்னும் சொல்லுக்கு “அழகு பொருந்துமாறு செய்தல்” அல்லது “ஒன்றைப்போல எழுதுதல்” என்னும் பொருள். இதனடிப்படையில் ஓவி என்னும் சொல் ஓவியத்தைக் குறித்துள்ளது. பின்னர் அம் என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து ஓவம் என்பது ஓவியத்தைக் குறித்துள்ளது. ஓவு அர் ஓவர் என்பது ஓவியரைக் குறித்துள்ளது. ஓவி அம் ஓவியம் என்னும் சொல்லாட்சி பின்னர் நடைமுறையில் வந்துள்ளது. ஓவியத்தை வரைபவர் பின்னர் ஓவியன் அல்லது ஓவியர் எனப்பெற்றனர். நேர்கோடு, வட்டம், முக்கோணம் ஆகிய மூன்று மூலவடிவங்களினின்று தோன்றிய உருக்கள் எண்ணிறந்தன. எல்லா வகையான…

இயல், இசை, நாடக விளக்கம் – க.வெள்ளைவாரணன்

இயல், இசை, நாடகம் அறிவீர்! உள்ளத்தால் பொருளியல்பை                 உணர்த்தும் மொழி இயல் என்பர் வெள்ளத்தால் எவ்வுயிரும் மகிழ்ந்திசைய                 ஓசைகளும் விளங்க இன்பம் கொள்ளச்செய் உரைத்தி றத்தாற்                 குலவுமொழி இசையென்பர்; குறித்த செய்கை விள்ளத்தால் அதுவாகப் பயிற்றுமொழி                 நாடகமா விரிப்ப ராலோ வெள்ளை வாரணனார்: யாழ்நூல் சிறப்புப் பாயிரம்

கலைச்செல்வத்தை மீட்டெடுப்போம்!

  கடல்வாய்ப் பட்டனவும் காலத்தின் மாறுதலினாலே மறைந்து போயினவுமாகிய நூல்கள் மிகப் பல. அந்நூற் பெயர்களைக் கூறிப் பழமை பாராட்டுவதோடு அமைந்திருப்போமா? இல்லை. முன்னிருந்த கலைச் செல்வத்தை மீட்டும் பெறுவதற்கு முயல்வோம். அத்தகைய முயற்சி நமது நாட்டிற்கு ஆக்கமளிக்கும். – விபுலானந்த அடிகள்: யாழ்நூல்: பாயிரவியல்