இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் – மு.வை.அரவிந்தன்
இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள்
தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை கண்டவர் இளம்பூரணர் என்று போற்றப்படுகின்றார். ஆனால், அவர் தனக்கு முன் வேறு சில உரைகள் தொல்காப்பியத்திற்கு இருந்ததைப் பலப்பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். பிறர் கருத்தை மறுக்காமல், உள்ளதை உள்ளவாறே சுட்டி மேலே செல்லுகின்றார். ஏனைய அதிகாரங்களை விட, சொல்லதிகாரத்தில் பல இடங்களில் இவர் பிறர் உரைகளை மிகுதியாகக் குறிப்பிடுகின்றார். ‘என்ப ஒருசாரார் ஆசிரியர்’ (44,57), ஒருவன் சொல்லுவது (4,18, 25, 38, 44), ஒரு திறத்தார் கூறுப (1, 56, 58), என்பாரும் உளர் (30, 33), என்பது ஒரு கருத்து (66, 447), ஒரு திறத்தார் ஆசிரியர் உரைப்பர் (122, 421), ஒரு சாரார் கூறுவர் (408, 455, 456) என்று இளம்பூரணர் பிற கருத்துகளைக் குறிப்பிடுகின்றார்.
-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:
உரையாசிரியர்கள்: பக்கம்.161-162
Leave a Reply