எமது போராட்டம் ஒவ்வொன்றும் தன்நிறைவும் கொண்டவையே – இராம் சிவலிங்கம்
எமது போராட்டம்
ஒவ்வொன்றும் தனித்துவமானதும்
தன்நிகரற்றதும் மட்டுமல்ல!
தன்நிறைவும் கொண்டவையே
— கலாநிதி இராம் சிவலிங்கம்
விடுதலை இந்தியாவுக்கான அறவழிப் போராட்டத்தின்போது, அதன்மகிமையை உணர்ந்த பிரித்தானிய அரசு, மாண்புடன் செயற்பட்டதால், இந்தியாவின் விடுதலை உறுதியானது.
எமது அறவழிப் போராட்டம், அதன் தன்மையை மதியா சிங்கள அரசின்அடிதடிக்கு உள்ளாகி, இரத்தம் தோய்ந்த போராட்டமாக மாற்றம் பெற்றது. அன்பை ஆயுதமாகக் கொண்ட இந்தப் போராட்டத்தில், நாம் பொறுப்போடுநடந்ததால், இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்றோம். உள்நாட்டு மோதல்,இலங்கை-இந்தியச்சிக்கலாக மாற்றம் பெற்றது.
அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக ஆயுதம் ஏந்துவதும்ஓர்அறவழிப் போராட்டமே என மொழிந்த எம் இளையோரின் செயல்வடிவமே எமது ஆயுதப்போர், போருக்கு இலக்கணத்தையும், போர்முனைக்குப் பொருளையும் தந்த, இந்த வீரர்களின் தீரத்துக்கு எல்லை ஏதப்பா! வீர மரபு, வீரத்தின் சின்னங்கள் என உலகம் பாராட்டியது. எமது போராட்டம், பன்னாட்டுப் பொருண்மையாக மாற்றம் கண்டது.
ஆயுதப் போரினால் கிடைத்த வெற்றி எமக்குத் தேவையான அடையாளத்தைத் தந்தாலும், அரசியல் போருக்கு உகந்த பல ஆதாரங்கள் சிங்கள அரசால்சிதைக்கப்பட்டது கண்டு நாம் கலங்கிய வேளை; எம் தேவையை அறியாது எம்மைத் தேடி வந்த போரல்லவா, இருபத்துஇரண்டு நாடுகள் பங்களித்த, இராசபக்சேயின் தமிழினஅழிப்புக்கான இறுதி நகர்வு.
ஆயுதமற்ற, இந்த ஆயுதப்போர்தானே, சனல் 4 ன் உதவியுடன், அரசியல் போருக்கான ஓர் திடமான தளத்தை எமக்குத் தந்தது. தந்தையின்அவலக்குரல் கேட்டு, அங்குவந்த அந்தக் கடவுளின் அருளால், அவர்தம்அன்புத் தெய்வங்களின் அற்பணிப்பு நிறைந்த தியாகத்தால் கிடைத்தபெறுபேறே, மேல்நாட்டவரின் பங்களிப்புடனான எமது இறுதிப்போர்.
முன்னைய இரண்டு போராட்டங்களும் தாயகத்தைத் தளமாகக் கொண்டுதன்நிறைவு பெற்றவை.
போராட்ட வடிவங்கள் மாறினாலும், இலட்சியம்மாறா எமது போராட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானதும், தன்நிகரற்றதும், தன்நிறைவு கொண்டவையுமாகும். வரம்பை மீறாது, மற்றவர் காலை மிதிக்காது நாம்செயற்பட வேண்டும்.
எமது பின்னைய போராட்டம், முன்னைய போராட்டத்தின் முடிவில் தொடங்கப்பட்டாலும்; பின்னைய போராட்டம், முன்னைய போராட்டத்தின் தொடர்ச்சியல்ல. அதாவது, அறவழிப் போராட்டத்தின் தொடர்ச்சியல்ல ஆயுதப்போர்; அதுபோல் ஆயுதப் போரின் தொடர்ச்சியல்ல அரசியல் போர். இதை உணராத சிலரின் தப்பானபோக்கே இன்றைய பிரிவுக்கான காரணமாகும்.
எமது இறுதிப் போரான அரசியல்போர், மூளைக்கும் மூளைக்குமான போர். சாணக்கியமும், இராசதந்திரமும் நிறைந்த உலகத் தலைவர்கள் மத்தியிலேசாமர்த்தியமாக நகர வல்ல திறமைசாலிகளே எமக்குத் தேவை. தோற்கும்சூழலிலும், வெற்றியோடு திரும்பவல்ல கூட்டமைப்பின் வெற்றி எமக்குஇன்றியமையாதது..
தேசியத்தை அழிக்க முயன்றவர்களுக்கும்; இறுதிப் போரில் எம் காலைவாரியவர்களுக்கும்; தேசியத்தின் பெயரால், தம் தேவைகளைப் பூர்த்திசெய்ய, தேசியத்துக்கு முரணாக செயற்படுவோருக்கும் இத்தேர்தல் முடிவுஓர் பாடமாக அமையவேண்டும்.
உயிருள்ள வரை வாழ்க்கையே என வாழும் எம் உறவுகள், தேர்தலின் போது,வாக்குச்சாவடி சென்று தமது வாக்கைப் பதிவுசெய்துவிட்டு வீடு திரும்பவழிசெய்யுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
– கலாநிதி இராம் சிவலிங்கம்
Leave a Reply