ஏன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்? – தமிழ்சிவா
ஏன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்?
- கல்வித்துறையைச் சீரழித்தது.
- மலை, மணல் போன்ற இயற்கை வளங்களைப் பேய்த்தனமாகச் சுரண்டியது.
3.சாராய ஆலைகள் நடத்தி மக்களைச் சாகடித்தும் பெண்களைக் கையறுநிலைக்குத் (அபலைகள்) தள்ளியும் அனைவரையும் அறிவுக் குருடர்களாக்கியும் அட்டூழியம் செய்தது.
- இலவசங்களால் மக்களைச் செயல்படாமல் செய்த குற்றத்திற்காக மாற்றம் வேண்டும்.
5.பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயல்களால் தமிழகத்தையே பாலைவனமாக்கிய குற்றங்களுக்காகத் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் எந்தவித மன்னிப்பும் வழங்கக் கூடாது . மீண்டும் அவர்களிடத்தில் ஆட்சியை வழங்குவதென்பது நமக்கு நாமே விரைவில் உயிர் பறிக்கும் நஞ்சு (சயனைடு).உண்பதற்கு இணையானது.
தி.மு.க.வின் சாதனைகள்!:
தன் குடும்ப நலனுக்காக ஓர் இனத்தையே அடகுவைத்த கொடுங்குற்றத்திற்காக என்றைக்கும் மன்னிப்பே வழங்கக் கூடாது.
தன் பெயரன் மலை முழுங்கி மகாதேவனாகச் செயல்பட்டுத் தலைமறைவானபோது, அது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்ற மு.க.வின் இரண்டகம் – துரோகம் – மன்னிக்கவே கூடாத செயல்.
கட்சியின் சொத்துகள் அனைத்தையும் தன் குடும்பம் மட்டுமே துய்க்க – அனுபவிக்க- தன் மகனைப் பொருளாளராக நியமனம் செய்த வஞ்சகத்திற்காக மன்னிக்கக் கூடாது.
எத்தனையோ தொண்டர்கள் உயிரைக் கொடுத்துக் கட்சியை வளர்க்கும்போது, “தன் மகன் என்னைக் காட்டிலும் 100மடங்கு உழைக்கிறார்“ என்று தன் மகனை மட்டும் பாராட்டும் அயோக்கியத்தனத்திற்காக மன்னிக்கக் கூடாது.
“ 67அகவையில் காமராசருக்குப் பதவி ஆசை போகவில்லையா?” என்று கேட்ட, மு.க. அவர்கள் 93அகவையிலும் பதவி நாற்காலியை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறாரே அந்தக் கயமைத்தனத்திற்காகத் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. காமராசரைவிட மக்கள்நலம் பேணும் மகானா மு.க.?
அ.தி.மு.க.வின் சாதனைகள்!:
உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த அயோக்கியத்தனங்களையும் குத்தகைக்கு எடுத்தாற்போலச் செயல்படும் சாதனைகளுக்காகப் புறக்கணிக்க வேண்டும்.
பா.ச.க. – நச்சை விதைத்து நச்சை அறுவடை செய்ய வல்லது.
பேராயக்கட்சி (காங்கிரசு) – இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து இன்பம் கண்ட கட்சி. பல்வேறு ஊழல்களை நேர்த்தியாகச் செய்து பேர்பெற்றது.
நண்பர்களே! தாய்மார்களே! தோழர்களே! மாற்றம் வேண்டுமென்று நினைப்பவர்களே! நம் நாட்டை-மொழியை-பண்பாட்டை- இனத்தைக் காக்கவும் மீட்கவும் கடைசி ஆயுதம் தற்போது நம் கையில் உள்ளது. சரியாகப் பயன்படுத்தத் தவறினால் இம்மண் சுடுகாடு ஆகும். நம் வருங்காலப் பிள்ளைகளுக்கு மன்னிக்கவே முடியாத குற்றம் இழைத்தவர்கள் ஆவோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம்! நன்றி.
தமிழ்சிவா
Leave a Reply