(அதிகாரம் 035. துறவு தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan

01.அறத்துப் பால் 

03.துறவற இயல்

அதிகாரம்  036. மெய் உணர்தல்

 

எப்பொருள் ஆயினும், அப்பொருளின்

உண்மையை ஆராய்ந்தும் அறிதல்.

 

  1. பொருள்அல்ல வற்றைப், பொருள்என்(று) உணரும்,

     மருளான்ஆம், மாணாப் பிறப்பு.

        பொய்ப்பொருள்களை, மெய்ப்பொருள்கள் என்று

       உணர்தல், சிறப்[பு]இல்லாப் பிறப்பு.

  1. இருள்நீங்கி, இன்பம் பயக்கும், மருள்நீங்கி,

     மா(சு)அறு காட்சி யவர்க்கு.

        மயக்கத்தை நீக்கிய ஞானியார்க்கே,

       தூயநல் பேர்இன்பம் தோன்றும்.

  1. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு, வையத்தின்

     வானம், நணிய(து) உடைத்து.

தெளிந்த அறிஞர்க்கே, மண்உலகுபோல்,

       விண்உலகும் அருகில் இருக்கும்.

  1. ஐஉணர்வு எய்தியக் கண்ணும், பயம்இன்றே,

     மெய்உணர்வு இல்லா தவர்க்கு.

       மெய்உணர்வு இல்லார்க்கு, ஐம்புலன்

       அடக்கத்தால், எப்பயனும் இல்லை.

  1. எப்பொருள், எத்தன்மைத்(து) ஆயினும், அப்பொருள்,

     மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு.

         எத்தன்மைத்தாய பொருளிலும், உண்மையை

       ஆராய்ந்து அறிவதே, அறிவு.

 356. கற்(று)ஈண்டு மெய்ப்பொருள் கண்டார், தலைப்படுவர்,

     மற்(று)ஈண்டு வாரா நெறி.

        மெய்ப்பொருள் கற்று ஆராய்ந்தார்க்கு

       பிறர்க்குத் தோன்றாவழிகள் தோன்றும்.

  1. ஓர்த்(து),உள்ளம் உள்ள(து) உணரின், ஒருதலைஆப்

     பேர்த்(து)உள்ள வேண்டா பிறப்பு.

   உள்ளதை உணரும் உள்ளத்தார்க்கு,

       மறுபிறப்புச் சிந்தனை வேண்டாம்.

  1. பிறப்(பு)என்னும் பேதைமை நீங்கச், சிறப்(பு)என்னும்

     செம்பொருள், காண்ப(து) அறிவு.

  பிறப்[பு]ஆம் அறியாமை நீங்கச்,

       சிறப்[பு]ஆம் மெய்ப்பொருளை உணர்க.

 

  1. சார்(பு)உணர்ந்து, சார்பு கெடஒழுகின், மற்(று)அழித்துச்,

    சார்தரா சார்தரு நோய்.

       மெய்ச்சார்புகள் உணர்ந்து, பொய்ச்சார்புகள்

       விட்டாரைத் துன்பங்கள் சாரா.

 

  1. காமம், வெகுளி, மயக்கம், இவைமூன்றன்

     நாமம் கெடக்,கெடும் நோய்.

        பேர்ஆசையும், சீற்றமும், அறியாமையும்,

   கெட்டால் துன்பமும் கெடும்.

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 037. அவா அறுத்தல்)