uraiyaasiriyargal_mu.vai.aravinthan_attai

தொகைநூலில் இடம்பெறா மேற்கோள் பாடல்கள்

  இறையனார் களவியலுரை, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய தொகை நூல்களிலிருந்து பல செய்யுட்களை ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளது. இடம் விளங்கா மேற்கோள் பாடல்கள் சில உள்ளன. அவை இலக்கியச் சுவை மிகுந்தவை; கற்கும்தோறும் இன்பமூட்டவல்லவை. “பையுள் மாலை” (சூத்.7), ‘ஏனல்’ (சூத்.7), ‘வெள்ளாங்குருகின்’ (சூத்.9), ‘நெருநலு முன்னாள்’ (சூத்.12) என்னும் தொடக்கத்தையுடைய அகப்பாடல்கள் எடுத்துக்­காட்டப்பட்டுள்ளன. இவை, தொகைநூலில் இடம்பெறாத பழைய அகப்பாடல்கள். தொகுத்தவை போக எஞ்சிய பாடல்கள் இவை போன்றவை பல இருந்திருக்கக் கூடும். (பிற உரையாசிரியர்களும் பல பழம் பாடல்களை எடுத்துக் காட்டுகின்றனர்.)

-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:

உரையாசிரியர்கள்: பக்கம்.134