(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 தொடர்ச்சி)

தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14

 

 நாமே தெய்வம்! நன்கறிக!

தன்மதிப்புடன் வாழத் தன்னம்பிக்கை வேண்டும். அதனால் ‘நாம் அனைவருமே தெய்வம்’ எனப் பல இடங்களில் கூறுகிறார்.

        “வீரர்தம் தோளினிலும் – உடல்

        வியர்த்திட உழைப்பவர் தோள்களிலும்” (பாரதியார் கவிதைகள்: பக்கம் 154 | திருமேகனைச் சரண் புகுதல்)

தெய்வம் இருப்பதாகக் கூறுகிறார்.

செல்வம் என்றொரு செய்கை எடுப்போர்

        செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்

        கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” (பாரதியார் கவிதைகள்: பக்கம் 158 | வெள்ளைத்தாமரை)

உயிர்களெல்லாம் தெய்வமின்றிப் பிறவொன்றில்லை

                ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்

        பயிலுமுயிர் வகை மட்டுமன்றியிங்குப்

                பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்” (பாரதியார் கவிதைகள்: பக்கம் 261 | சுயசரிதை)

தேசுடைய பரிதியுருக் கிணற்றினுள்ளே

                தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்” (பாரதியார் கவிதைகள்: பக்கம் 264 | சுயசரிதை)

என எங்கும் இங்கும் தெய்வம் நமக்குள்ளும் இருப்பதாகக் கூறுகிறார் பாரதியார். எனவே, புதிய ஆத்திசூடியில் “தெய்வம் நீ என்று உணர்” (ஆ.சூ 48) எனக் கட்டளையிடுகிறார்.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

இலக்குவனார் திருவள்ளுவன்