(சனாதனம் – பொய்யும் மெய்யும் 65-66 தொடர்ச்சி)


  • இந்து சமயம் என்று தற்போது அழைக்கப்படுவது, இதன் உண்மையான பெயர் அன்று. காலத் தொடக்கம் அற்ற இந்த வாழ்வியல் தருமத்திற்கு வரலாற்றுக் காலத்தில் வைக்கப்பட்ட பெயரே இந்து என்பதாகும். அநாதியான வேதங்களில் இந்தத் தருமம் வேர் கொண்டிருக்கிறது. இது நிறுவப்பட்ட மதமும் அல்ல. ஆர்யவருத்தத்தில் முனிவர்களின் இறை அனுபவத்தால் விளைந்த இனிய கனி இது. வைதீக சமயம் என்றும், வேதாந்தம் என்றும்கூட இது அழைக்கப்படுகிறது…. என்று சாய்பாபா கூறுகிறாரே!

  • இந்து மதமும் சனாதன தருமமும் ஒன்று என்னும் பொழுது எப்படி சனாதனம் என்பது எல்லா மதத்திற்கும் பொதுவானதாக இருக்கும்? வேதங்களில் வேர் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆரிய வேத நெறி என்பது எல்லா உயிர்களையும் சமமாக எண்ணும் தமிழ்நெறிக்கு மாறானதல்லவா? அப்புறம் தமிழ்நெறியைச் சனாதம் என்பது வடிகட்டிய பொய்தானே!
    இந்து மதமும் சனாதனமும் வேறு. இது குறித்துத் திருக்குறள் தலைமைத் தூதர் முனைவர் கு.மோகன்ராசு பின்வருமாறு விளக்குவதைக் காணுங்கள்.
  • இந்து என்பதற்கான வரையறை:
    இந்தியாவில், கிறித்தவர்கள் இசுலாமியர்கள் அல்லாத அனைவரும் இந்துக்கள் என ஒரு வரையறை உள்ளது.
    இவர்களுள் சமணர்கள், பௌத்தர்கள், உலகாயுதர்கள், ஆசிவகர்கள் ஆகியோர் சனாதனத்தை எதிர்ப்பவர்கள்.
    சைவர்கள் சனாதனத்தை ஏற்காதவர்கள்.
    வைணவர்கள் ஓரளவு ஏற்பவர்கள்.

    இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள சூத்திரர்களுக்கு எந்த வகையிலும் சனாதனம் சாதகமாக அமையாத ஒன்றாக உள்ளது.
    இந்த நிலையில் சனாதனத்திற்கு உரியவர்களாக அமைபவர்கள் பிராமணர்கள். அவர்கள்தான் சனாதனத்தில் பிதாமகர்கள்.
    இந்த நிலையில் சனாதனம் என்பது பிராமணம் அல்லது பார்ப்பனம் எனக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
    இந்த நிலையில் இந்து தருமம் வேறு சனாதனம் வேறு எனக் கொள்ள வாய்ப்பு உள்ளது.