(சனாதனம் – பொய்யும் மெய்யும் 67-69 தொடர்ச்சி)

அன்பும் சிவனும் இரண் டென்பரறிவிலார்

அன்பே சிவ மாவதற்கும் அறிகிலார்

அன்பே சிவ மாவதாகும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

என்பது திருமூலர் கூற்று.

அன்பு, அன்பிலிருந்து பிறக்கும் அருள் (அன்பு ஈன் குழவியாகிய அருள்) எவ்வகை வேறுபாடின்றி எல்லா உயிர்களிடத்தும் காட்ட வேண்டிய பண்பாகும். குடும்பத்திலுள்ள பெற்றோர், உடன் பிறப்புகள், வாழ்க்கைத் துணை, மக்கள், பிறர், பிற உயிர்கள் என அனைத்துத் தரப்பாரிடமும் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் காட்டப்படுதே அன்பு என்னும் நெறி. இதுவே தமிழ் நெறி.

ஆனால், சனாதனம் பிராமணனைத் தவிர பிறரிடம் அன்புகாட்டியோ அருள் உள்ளத்துடனோ ஏதும் கொடுத்தால் நரகம் செல்வான் என்றும் பிராமணனுக்குக் கொடுப்பவன் மட்டுமே மேலுலகம் செல்வான் என்றும் அன்பு நெறிக்கு எதிராகக் கூறுகிறது. அவ்வாறிருக்க, தவறான கருத்தைப் பரப்பும் இரங்கராசு(பாண்டே)க்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

இவ்வடிகள் இடம் பெறும் பூதத்தாழ்வாரின் முழுப்பாடல் வருமாறு:

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

இங்கே ஞானத்தால் இறைனை வணங்கியதாகப் பூதத்தாழ்வார் கூறவில்லை. அவ்வாறு கூறினால் சனாதனத்தின் தோற்றுவாயான சமற்கிருதத்தில் வழிபட்டதாகப் பொருள் வரும். எனவேதான்  தமிழால் வழிபட்டதாகக் கூறுகிறார். தமிழ் என்பது இனிமை; தமிழ் என்பது அன்பு; தமிழ் என்பது அருள்; தமிழ் என்பது அறிவு; தமிழ் என்பது இறைமை; இதற்கு மாறானது சனாதனம். அவ்வாறிருக்க இரண்டையும் ஒன்றாகத் திரித்துக் கூறும் இரங்கராசு(பாண்டே)க்கு இறைவன் எங்ஙனம் நல்லருள் புரிவார்?

பிராமணனுக்கு எல்லா வருணத்தாரும் பணிவிடை செய்ய வேண்டும். சூத்திரன் எலலா வருணத்தாருக்கும் பணிவிடை செய்ய வேண்டும். என்பதுதான் சனாதம் கூறும் பணிவு.

இத்தகைய அடிமைத்தனத்தைத்தான் பணிவு என்கிறாரா இரங்கராசு.

  • காண்க வினா விடை 60