(வெருளி நோய்கள் 1326 -1330 : தொடர்ச்சி)

தூக்கு வண்டி(bucket truck, or boom truck) தொடர்ந்த அளவு கண்ட பேரச்சம் தூக்கு வண்டி வெருளி.
வாளி வண்டி என்றால் தண்ணீர் வாளிபோல் எண்ணுவர். மேலே ஏற்றி பணியாற்ற உதவுவதால் ஏற்றி என்று சொல்லலாமா? அப்படியானால் கட்டடம், கம்பம் போன்றவற்றின்மீது ஏறுவதற்கு உதவுவது எனப் பொருள் வரும். வாளி போன்ற தாங்கியைத் தூக்கி உயர்த்துவதன் மூலம் அதில் உள்ளவர்கள் மின் கம்பம் முதலான உயரப்பகுதிகளில் அவற்றில் ஏறாமலேயே பணியாற்ற முடிகிறது. எனவே, தூக்கி இணைக்கப்பட்ட வண்டியைத் தூக்கு வண்டி என்பது சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
00

தூசுறிஞ்சி(vacuum cleaner) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தூசுறிஞ்சி வெருளி.
தூசுறிஞ்சி இயங்கும் பொழுது ஏற்படும் ஒலி சிலருக்குப் பேரச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இரைச்சல் வெருளி (Acousticophobia/ Ligyrophobia), ஒலி வெருளி (Phonophobia/Sonophobia) ஆகிய வற்றுடன் தொடர்புடையது எனலாம்.
00

தூம்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் தூம்பு வெருளி.
நெடுநீள் குழாய் வெருளி போன்றதே தூம்பு வெருளி.
00

  1. தூயநிலை வெருளி-Hagiophobia

தூய்மை நிலை, தூய்மைப் பொருள்கள் மீதான விருப்பமின்மை வெறுப்பு முதலியவற்றால் ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் தூயநிலை வெருளி.
துறவியர் வெருளி-Hierophobia / hermitphobia உடன் தொடர்புடையது.
00

தூய்மையாக்கிப் பொருள்கள்(cleaning agents) மீதான அளவு கடந்த பேரச்சம் தூய்மையாக்கி வெருளி.
தூய்மையாக்கிப் பொருள்களில் கலக்கும் வேதியல் பொருள்களால் கை அரிப்பு, அல்லது ஒவ்வாமை ஏற்படும் என்று அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00