அப்படி.. அப்படி! – மு இராமச்சந்திரன்
அப்படி.. அப்படி!
ஆசைகளோடு அலைந்தால் எப்படி?
அடிக்கடி வீழ்ந்து கிடந்தால் எப்படி?
வரப்புகளின்றி. பாய்ந்தால் எப்படி
வசதிகளின்றி குடித்தனம் எப்படி?
அசதிகளோடு கிடந்தால் எப்படி?
ஆட்டம் விடாது நடந்தால் எப்படி?
சுகம் சுகமென்று கிடந்தால் எப்படி?
சுற்றுச் சூழலை மறந்தால் எப்படி?
கூடிக் களிக்க மறந்தால் எப்படி?
குடும்பம் இன்றிக் கிடந்தால் எப்படி?
அன்பும் நேசமும் விதைப்பாய் அப்படி!
வசதிகள் தேடி செய்வாய் அப்படி!
கூத்தும் குடியும் விடுவாய் அப்படி
குழந்தைத் தனங்களை விடுவாய் சொற்படி..
கன்றாய் தாயாய் மகிழ்வாய் நற்படி
கற்றாரோடு படிப்பாய் அதிரடி..
எழுவாய் செய்வாய் இன்பத்தில் வினையடி
ஏற்பார் நிற்கனும் பலராய் உனதடி!
-பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.
Leave a Reply