sinhala-spears01

தமிழர்களை அழிப்பேன்
தமிழையும் அழிப்பேன்
தணிக்கைகள் பல செய்வேன்
தமிழ் இனத்தை
தவி தவிக்கச் செய்து
தரணியில் இல்லையெனச் செய்வேன்!….என்று

தனி மனித உரிமைகளைத்
தட்டிக் கழித்தான்
தனி நாடு கேட்டோம்
தத்துவங்கள் பல பேசி,
தந்திரங்கள் என நினைத்து,
தரித்திரத்தைத் தேடிக் கொண்டான்!….

தமக்கென இருக்கிறான் ஒருவன்
தக்க சமயத்தில் வருவான்
தயக்கமென்ன தமிழா!
தலை நிமிர்ந்து நில்லு
தமிழ் இனத்தின்
தனித்துவத்தைச் சொல்லு உலகிற்கு!….

prabaharan08

http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211614