(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10 தொடர்ச்சி)

இராவண காவியம்: பாயிரம்

தமிழகம்

 

11.பண்டு நம்மவர் பாத்துப் பலவளங்

கண்டு சுற்றங் கலந்து கரவிலா

துண்டு வாழ வுதவி யுலகவாந்

தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம்.

12.நினைத்த நெஞ்சு நெகிழகந் தாயகம்

அனைத்து முண்டு யாழியோ டாரியம்

இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள

தனித்தி ராவிடத் தாயினைப் போற்றுவாம்.

தமிழ்மக்கள்

  1. ஒழுக்க மென்ப துயிரினு மேலதன்

இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப்

பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர்

வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்.

 

14.குன்று மாரியக் கொள்கை மறுத்தெதிர்

நின்று தாழ்ந்த நிலைமையை யெய்தியும்

குன்றி யேனுந்தங் கொள்கையை விட்டிடா

வென்றி மேதமிழ் வீரரைப் போற்றுவாம்.

15.கள்ள ரென்று மறவரென் றுங்கடைப்

பள்ள ரென்றும் பறையரென் றும்பழித்

தெள்ள நொந்து மியல்பிற் றிரிகிலா

மள்ள ராந்தமிழ் மக்களைப் போற்றுவாம்.

 

தொடரும்

இராவண காவியம்

புலவர் குழந்தை