இராவண காவியம்: பாயிரம்: தமிழகம், தமிழ்மக்கள்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் தமிழகம்   11.பண்டு நம்மவர் பாத்துப் பலவளங் கண்டு சுற்றங் கலந்து கரவிலா துண்டு வாழ வுதவி யுலகவாந் தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம். 12.நினைத்த நெஞ்சு நெகிழகந் தாயகம் அனைத்து முண்டு யாழியோ டாரியம் இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள தனித்தி ராவிடத் தாயினைப் போற்றுவாம். தமிழ்மக்கள் ஒழுக்க மென்ப துயிரினு மேலதன் இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப் பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர் வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்….

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் – சி.இலக்குவனார்

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் அகம், புறம் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள மரபைக் கொண்டுள்ளன. அகம்பற்றிய படைப்புகள் தலைவன் தலைவியின் உளவியல் செயல்பாடுகள் குறித்து அதிகம் வலியுறுத்துகின்றன. அவை பெரும்பான்மையும் உளவியல் ஆர்வம் கொண்டுள்ளன. உணர்வுகள் மேலோங்கி இருக்கக்கூடிய ஒடிசி போன்று அவை ஆழமாகத் தனிநிலையாக விளங்குவன. பொதுவாக அகம் காதல் குறித்தும், புறம் இவற்றின் புறநிலைச் செயல்பாடுகள் குறித்தும் கையாளுவதாகச் சொல்லப்படுகிறது . . . . . . . . ….