plainflag

எந்நாளோ?

உனக்காய்ப் பேசா உயிரிலா இந்தியம்

உடைந்து வீழ்ந்திடும் உயிர்நாள் என்றோ

தனக்காய் உலவிடும் தடியர் கும்பல்

தலையிலா கிடந்திடும் திருநாள் எதுவோ

சினத்துடன் இம்மண் சீறியே கிளர்ந்து

சிறைகளை உடைக்கும் சீர்நாள் அதுவே

எனக்கு விடுதலை என்பேன் முதுபெரும்

எம்மினம் மகிழ்ந்திடும் இன்பநாள் உரைப்பேன்

கணக்கிலா சாவுகள் களத்தில் கண்டும்

கயவரின் பிடியில் காண்பதா நாடு

மணக்கும் தாய்மண் மரிக்கும் நிலையில்

மடையர் கைக்குள் மாயினம் இருப்பதா?

பணம்தான் பெரிதெனப் பிணமாய் வாழ்ந்திடும்

பண்பிலா விலங்கே பறைவாய் இங்கே

வணங்கும் தமிழ்நிலம் வடவர் சிறைக்குள்

வதங்கியே சாவதா வந்துநீ சொல்லடா!

பிணக்கு யாவையும் பிழையென ஒதுக்கி

பிறங்கடை வாழ்ந்திடப் போர்க்களம் நோக்கி

இணைவோம் தமிழா இந்தியம் அறுத்து

இறவா இனமாய் என்றும் நிமிர்வோம்

அனைத்தும் சரியென அகம்தான் ஏற்றால்

அண்ணன் தம்பியாய் ஆர்த்து எழுவோம்

உணர்வுடன் விடுதலை உயிர்ப்பா படித்தே

உணர்த்துவோம் பகைக்கு உயர்ந்தவன் யாரென!

பரணிப்பாவலன்

பரணிப்பாவலன்

Pughazhselvi Outside Attai1