உணர்த்துவோம் பகைக்கு! – பரணிப்பாவலன்

எந்நாளோ? உனக்காய்ப் பேசா உயிரிலா இந்தியம் உடைந்து வீழ்ந்திடும் உயிர்நாள் என்றோ தனக்காய் உலவிடும் தடியர் கும்பல் தலையிலா கிடந்திடும் திருநாள் எதுவோ சினத்துடன் இம்மண் சீறியே கிளர்ந்து சிறைகளை உடைக்கும் சீர்நாள் அதுவே எனக்கு விடுதலை என்பேன் முதுபெரும் எம்மினம் மகிழ்ந்திடும் இன்பநாள் உரைப்பேன் கணக்கிலா சாவுகள் களத்தில் கண்டும் கயவரின் பிடியில் காண்பதா நாடு மணக்கும் தாய்மண் மரிக்கும் நிலையில் மடையர் கைக்குள் மாயினம் இருப்பதா? பணம்தான் பெரிதெனப் பிணமாய் வாழ்ந்திடும் பண்பிலா விலங்கே பறைவாய் இங்கே வணங்கும் தமிழ்நிலம் வடவர்…

பைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் – புகழ்ச்செல்வி

பகைக்கு எரிமலை! பைந்தமிழுக்குப் பனிமலை! பைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் மொழி என்பது ஆறறிவு கொண்ட மாந்தனுக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற மிகப் பெரிய ஆற்றலாகும். கொப்பூழ்க் கொடி அறுத்த நாள்முதல் காலில்லா தொட்டிலில் படுக்கும்வரையில் மாந்தனுக்கு மாந்தன் உறவாடிக் கொள்ளத் தேவையான முதன்மையான வழி மொழியாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியை – அதன் வாழ்வை – சிறப்பை  – பெருமையை, மேலும் அதை எவ்வாறு வளர்ப்பது என்று ஒவ்வொரு மொழி இனத்தாரும் எண்ணிச் செயல்படுகின்ற வேளையில் உலக மொழிக்கெல்லாம் மூத்ததாய்   இளமை மாறாததாய்…

புகழ்ச்செல்வி 100ஆவது இதழ் வெளியீட்டு விழா

சித்திரை 22, 2046 / மே05, 2015   பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தொப்புள்கொடி உறவுகளுக்கு வணக்கமும் வாழ்த்தும். நமது புகழ்ச்செல்வி இதழின் 100 ஆவது வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சித்திரை 22, 2046 – 5.5.2015 இல் நடக்க இருக்கின்றது. அந்நிகழ்வுக்கு உங்களை நேரில் பார்த்து அழைக்க விருப்பம் இருந்தாலும் காலமும் பொருள்நிலை சூழலும் இடம் கொடுக்க வில்லை ஆகையால் உங்கள் அகத்திற்கே வந்து தருவதாய் எண்ணி வருகை தாருங்கள் நம் இதழ் விழா என்றே இப்படிக்கு உங்கள் உறவான — பரணிப்பாவலன்

முற்றாய் எழுக முள்ளிவாய்க்கால் நாற்றாய்- பரணிப்பாவலன்

    உற்றார் உறவுகள் உணவுக்காய் உடல்களை விற்றிட பசியுடன் விழிகள் இரண்டும் வற்றாக் கண்ணீர் வைகை ததும்பிட கற்ற கரும்புலி காடையர் பிடியில் சுற்றிய ஆடைகள் சுருங்கிச் செத்திட புற்றாய் வீழ்ந்ததே புலிப்படை கோட்டை கற்றை இனமாய் கதிர்கை இயக்கமாய் வெற்றியை மட்டுமே விளித்த தமிழராய் சாற்றியப் புகழுடன் சுற்றும் புவிக்குள்   மாற்றம் விதைத்த மறவர் கூட்டமாய் சீற்றம் கொண்டு சிங்கள நாpகளைத் தூற்றி யடித்தநம் தூயோர் எங்கே தோற்ற மறியா தொல்குடி வேந்தரே! கொற்றம் பிடிக்கவும் கொடுந்துயர் முடிக்கவும் முற்றாய்…