குறுந்தகவல் பாக்கள்
முடி சூடிய தமிழினம்
முள்வேளி கம்பிக்குள் !
– ஈழபாரதி, புதுக்கோட்டை
**
சிங்களப் பெண்கள்
உதட்டுச் சாயம்
ஈழத் தமிழர் குருதியில்!
– கணேசன், காங்கேயம்
**
பனிக்குடம் உடைத்து
தொப்புள் கொடி அறுத்தார்கள்
துடிக்கிறது ஈழம்!
– அமீர்சான், திருநின்றவூர்
**
அம்மணமாய்-தமிழன்
அகிலமே பதைக்கிறது
உடன் பிறப்புக்கு, தமிழ் மாநாடு!
– ஏழைதாசன், புதுக்கோட்டை – 2
**
புத்தத் தேசத்திற்கு
ஆயுதம் கொடுத்தது
காந்தி தேசம்!
– எசு.விசயகுமார், புதுக்கோட்டை
**
அனாதையாக அமைதி
தத்தெடுக்கத் துடிக்கும் ஈழம்!
– யசுடின், கொடைக்கானல்.
நன்றி: குகன் பக்கங்கள்
Leave a Reply