நானேன் பறப்பேன் நராதிபனே!
கொக்குப்பறக்கும் புறாப்பறக்குங் குருவிபறக்குங் குயில்பறக்கும்
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர் நானேன் பறப்பேன் நராதிபனே
திக்கு விசயஞ் செலுத்தியுயர் செங்கோல் நடாத்தும் அரங்காநின்
பக்கம் இருக்க வொருநாளும் பறவேன் பறவேன் பறவேனே.
இராம கவிராயர்
(மா மா காய் அரையடிக்கு) வாய்பாடில் அமைந்த அருமையான அறுசீர் விருத்தம் இனிது.
நானேன் பறப்பேன் நராதிபனே!
கொக்குப் பறக்கும் புறாப்பறக்குங்
..குருவி பறக்குங் குயில்பறக்கும்
நக்குப் பொறுக்கி களும்பறப்பர்
..நானேன் பறப்பேன் நராதிபனே
திக்கு விசயஞ் செலுத்தியுயர்
..செங்கோல் நடாத்தும் அரங்காநின்
பக்கம் இருக்க வொருநாளும்
..பறவேன் பறவேன் பறவேனே. – இராம கவிராயர்
அராதிபனே அல்லது நராதிபனே – எது சரி? பொருள் என்ன?
நராதிபனே என்பதே சரி. திருத்தியமைக்கு நன்றி.
நராதிபன் என்றால் நரர்களின் அதிபன் = தலைவன் எனப் பொருள்.
அன்புடன் ஆசிரியர்.