தமிழன் என்போன் யார்?

1.

தமிழ னென்றால் தன்மா னம்

    தமிழ னென்றால் பகுத் தறிவு

தமிழ னென்றால்  மறத்த ன்மை

   தமிழ னென்றால் மாந் தவன்பு

தமிழ னென்றால் உறவு டைமை

   தமிழ னென்றால் கொடைத்தன்மை

இமிழ்க திர்சேர் ஒளியாக

     இருப்பான் தமிழ்ச் சேயாவான்!

2.

மாற்றான் காலில்  மண் டியிட்டே

   மண்ண கத்தே வாழ்ந் துகொண்டும்

ஊற்றே  டுக்கும் சிந்த னையை

    உள்ளந்  தன்னில் துறந்துவிட்டும்

கூற்றம் அன்ன பகைவ னது

    கொள்கை  தன்னைக் கடைபிடித்தும்

ஏற்று பணிசெய் கின்றோனும்

   எழிற்ற  மிழ்த்தாய் சேயுமல்லன்!

புலவர் பழ.தமிழாளன்,

இயக்குநர்–பைந்தமிழியக்கம்,திருச்சிராப்பள்ளி.