prapakaran_piranthanaal-thamizharnaal

நீ பிறந்தாய் –
தமிழரின் தனி அடையாளத்தை
உலகம் தெரிந்து கொண்டது!

நீ பிறந்தாய் –
தமிழரின் தீரம் இதுவென்று கண்டு
உலகமே அதிர்ந்து நின்றது!

நீ பிறந்தாய் –
சிங்களனின் திமிரெங்கோ
தலைகவிழ்ந்து வீழ்ந்தது!

நீ பிறந்தாய் –
ஈழத் தேசம் ஒட்டுமொத்தத் தமிழரின்
கனவுத் தேசம் ஆனது!

இதோ.. கனவுத் தேசம் கைகூடும்
நாளின்னும் வெகு தொலைவிலில்லை..

எங்களின் ஒற்றைத் தலைவனே..
கனவுத் தேசம் இனி எங்களின் –
இலட்சியத் தேசமென முழங்குவோம்;

இந்த இலட்சியத் தேசம் வெல்லும் நாளில்
உன் பிறந்த நாள்தானே – எங்களின்
முடிசூடும் ஈழத் திருநாளாகும்!

லோக நாதன்