தலைப்பு-தமிழர்வருக,இல.பிரகாசம் :thalaiippu_thamizharvaruga_varuga

தமிழர் வருக! வருக!

தடந்தோள் களிரண்டும் புடைத்திட

தமிழர் வருக! வருக!

தமிழச்செங்கோல் உயாந்திட

தமிழர் வருக வருக!

தமிழர் நிலம் செழித்திட

தமிழர் செவ்வேல் உயர்த்தி

தடமதிர வருக வருக!

தமிழ் பண்மொழி காத்திட

தமிழர் புகழ்நிலை பெற்றிட

தமிழர் வருக வருக!

தமிழர் களிப்புற் றிருந்திட

தமிழர் சமர்க்களம் வருக!

தமிழர் தம்திறம் கொணர்ந்திட

தமிழர் ஆர்ப்பரித்து வருக!

தமிழ் வீரர்அணி யணியாய்

தமிழுரம் கொண்டெழுந்து வருக!

தமிழர் தம்மார்பில் வீரவடுக்களை

தாங்கி அழியாப் புகழ்பெற்றிட

திமிரும் அயலான்கொம் பினையடக்க

திரண்ட தொடைகள் விளையாடிட

தமிழர் திரளாய் திரண்டெழுந்தே

தன்விருப்புற் றார்த்து வருக!

தமிழர் வருக! வருக!

– இல.பிரகாசம்

முத்திரை-சிறகு :muthirai_chiraku_siragu