பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை – இல. பிரகாசம்

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை பெண்ணுரிமைச் சிந்தனை: “ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டிலே” எனும் பாரதியாரின் பெண்ணியச் சிந்தனையையும், தந்தை பெரியார் அவர்களது பெண்ணியம், பகுத்தறிவுக் கொள்கையினையும் தனது சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் வழியாக வஞ்சி என்னும் பெண்ணின் பகுத்தறிவுக் குரலினை எதிரொலிப்புச் செய்கிறார். பெண்ணுரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு:   பெண்ணிற்குப் பேச்சுரிமை இல்லாமையால், ஒரு  குமுகம்(சமூகம்) எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்படும் என்று தான் படைத்த பாத்திரமான வஞ்சியின் நிலையிலிருந்து எடுத்துரைக்கிறார்.  “பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டா…

தமிழர் வருக! வருக!- இல.பிரகாசம்

தமிழர் வருக! வருக! தடந்தோள் களிரண்டும் புடைத்திட தமிழர் வருக! வருக! தமிழச்செங்கோல் உயாந்திட தமிழர் வருக வருக! தமிழர் நிலம் செழித்திட தமிழர் செவ்வேல் உயர்த்தி தடமதிர வருக வருக! தமிழ் பண்மொழி காத்திட தமிழர் புகழ்நிலை பெற்றிட தமிழர் வருக வருக! தமிழர் களிப்புற் றிருந்திட தமிழர் சமர்க்களம் வருக! தமிழர் தம்திறம் கொணர்ந்திட தமிழர் ஆர்ப்பரித்து வருக! தமிழ் வீரர்அணி யணியாய் தமிழுரம் கொண்டெழுந்து வருக! தமிழர் தம்மார்பில் வீரவடுக்களை தாங்கி அழியாப் புகழ்பெற்றிட திமிரும் அயலான்கொம் பினையடக்க திரண்ட…

பாரெங்கும் தமிழ் – இல. பிரகாசம்

பாரெங்கும் பாரீர்! பாரெங்கும் பாரீர்! தமிழினம் தனித் தன்மையோடு சேருவதைப் பாரீர்! பாரீர்! பாரீர்! பேதமைகளைத் தூக்கியெறிந்து ஒன்றாவதைப் பாரீர்! வையகம் வென்றிட தோழமையோடு நடைபோடும் தோழமைத் தமிழினம் இங்கே பாரீர்! பாரீர்! வையகத் தலைமை கொண்டு வழிநடத்தும் தமிழ் வேந்தர்களைப் பாரெங்கும் பாரீர்! உயிரினும் மேலான அறத்தை நாளும் வையக மெல்லாம் சீராய்ப் பரப்பும் தரணி புகழ் கொண்ட தமிழன் விண்ணுலகைச் சுட்டுவிரல் நுனியில் ஆட்டிவைக்கும் விண்ணறிவு கொண்ட தமிழனைப் பாரீர்! பாரெங்கும் பாரீர் பாரீர்! எந்நாளும் எல்லார்க்கும் எல்லாம் ஈயும் கொடையுள்ளம்…