tigerincave01

சேரன் செங்குட்டு வன்பிறந்த
வீரம் செறிந்த நாடிதன்றோ?

  சேரன் செங்குட்டுவன்…

பாரோர் புகழ் தமிழ்ச் சேயே
பகை யஞ்சிடும் தீயே
நேரில் உன்றன் நிலையை நீயே
நினைந்து பார்ப் பாயே.

  சேரன் செங்குட்டுவன்…

பண்டி ருந்த தமிழர் மேன்மை
பழுதாக முழு துமே
கண்டி ருந்தும் குகையிற் புலிபோல்
கண்ணு றக்கம் ஏனோ?

  சேரன் செங்குட்டுவன் …

– பாவேந்தர் பாரதிதாசன்bharathidasan06